Monday, December 4, 2023
- Advertisement -
HomeEntertainment"போடு… ஆட்டம் போடு… நம்மள கேக்க எவனும் இல்ல" டீசர் அறிவிப்பை வெளியிட்டு அமர்க்களப்படுத்திய 'பத்து...

“போடு… ஆட்டம் போடு… நம்மள கேக்க எவனும் இல்ல” டீசர் அறிவிப்பை வெளியிட்டு அமர்க்களப்படுத்திய ‘பத்து தல’ படக்குழு..!

சிம்பு, கெளதம் கூட்டணி மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பியது. கடந்த வருடம் வெளியான இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூலிலும் மாஸ் காட்டியது. இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

இந்தப்படத்திற்கு முன்பாகவே ‘பத்து தல’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ கீரின் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த தாதா கெட்டப்பில் சிம்பு ‘பத்து தல’ படத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் ஆரம்பத்தில் சிம்புவிற்கு குறைவான காட்சிகளே இருந்தது. ஆனால் படத்தின் மீது அவர் காட்டிய ஆர்வத்தால் அவரின் காட்சிகளை படக்குழுவினர் அதிகப்படுத்தினர். ‘பத்து தல’ படத்தின் ரீமேக்கை ‘சில்லுன்னு ஒரு காதல்’ பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்தப்படத்தின் முதல் சிங்கிளாக வெளியான ‘நம்ம சத்தம்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்த இந்தப்பாடலை ஏ.ஆர். ரஹ்மான் பாடியிருந்தார். ‘பத்து தல’ படத்தில் சிம்புவுடன் இணைந்து பிரதான கதாபாத்திரத்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்தப்படம் சினிமாவில் அவருக்கு பிரேக் கொடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்தப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன், மனுஷ்யபுத்திரன், கலையரசன், டிஜே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ‘பத்து தல’ படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular