Entertainment

#STR48 போர் வீரனாக வேட்டையாட காத்திருக்கும் சிலம்பரசன்.. இதுக்காக தான் வெளிநாட்டில் பயிற்சியா? ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சிம்பு சமீப காலங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் ரிலீசாகி அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு மற்றும் கவுதம் மேனன் நடிப்பில் வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் சிம்பு. கதைத்தேர்வுகளிலும் சிறப்பான கவனத்தை சிம்பு செலுத்தி வருவதாகவும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல படம் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. படத்தில் சிம்புவுடன் ப்ரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் மற்றும் கவுதம் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் சென்சார் செய்யப்பட்டு யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்த நிலையில் சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் STR48 . இந்தப் படத்தில் சிறப்பான பிளாஷ்பேக் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் போர்வீரராக நடிகர் சிம்பு நடிக்கவுள்ளாராம். மிகவும் பவர்புல்லாக இந்த கேரக்டர் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிக்க திஷா பட்டானி, பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இவர்களில் யார் இறுதிச் செய்யப்படுவார்கள் என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. STR48 படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாகவும் தேசிங்கு பெரியசாமி இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ப்ரமோவும் ரசிகர்களை கவரும்வகையில் வெளியாகியுள்ளது இந்தப் படமும் கேங்ஸ்டர் படமா இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இந்தப் படத்தின்மூலம் தன்னுடைய கனவுகள் நனவாக உள்ளதாகவும் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் Blood and Battle என்றும் தன்னுடைய சமூக வலைதளத்தில் ப்ரமோ வீடியோவுடன் தெரிவித்துள்ளார். இதற்காகவே வெளிநாட்டில் சிலம்பரசன் வெளிநாட்டில் பாக்ஸிங் பயிற்சி பெற்று வந்ததாகவும், போர் வீரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அதிக முடி வளர்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top