சினிமா

நயன்தாராவால் பறிப்போன சிம்புவின் PS-1 வாய்ப்பு ; அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வலைப்பேச்சு அந்தனன்

Simbu Nayanthara issue in Ponniyin Selvan

நடிகை நயன்தாராவால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை சிம்பு இழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சிம்புவும் நயன்தாராவும் ஆரம்ப காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் காதலித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவர்கள் அப்போதே ஒரு சில காரணங்களால் பிரிந்து விட்டனர். தற்போது இருவரும் வெவ்வேறு பாதையில் பயணித்து , நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் சிம்புவும் தனது உடல் எடையை குறைத்து தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் தற்போது ரசிகர்களிடையே பேசும் பொருளாக உள்ளது. இந்த டீசர் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த திரைப்பட தயாரிப்பாளரும் வலைப்பேச்சு அந்தணன், நடிகர் சிம்பு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருந்ததாக கூறியிருந்தார். செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்ததன் மூலம் அவருக்கும் இயக்குனர் மணிரத்தினத்துக்கும் நல்ல நட்பு ஏற்பட்டதாக அந்தனன் குறிப்பிட்டார்.

Advertisement

மணிரத்தினமின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு வை நடிக்க மணிரத்தினம் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார் . இதேபோன்று அந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவும் நடிக்க இருந்ததாக அந்தனன் கூறினார். அப்போது நடிகர் சிம்பு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தால் தாம் அதில் நடிக்கப் போவதில்லை என்று நயன்தாரா போர்க்குடி தூக்கியதாகவும் , இதனை அறிந்த நடிகர் சிம்பு அந்தப் படத்தில் இருந்து விலகியதாகவும் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார் .

மேலும் ஒரு யூடியூப் சேனலில் விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றதாகவும், அதில் நடிகை நயன்தாராவும், சிம்புவும் பங்கேற்க இருந்ததாகவும் அந்தனன் குறிப்பிட்டார். அப்போது நடிகர் சிம்பு வருவதை அறிந்த நடிகை நயன்தாரா, விழா ஒருங்கிணைப்பாளர்களிடம் சிம்பு வருவதை தம்மிடம் ஏன் முன்பே கூறவில்லை? அவர் வந்தால் நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று நயன்தாரா கூறியதாக அந்தனன் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட நடிகர் சிம்பு தம்மால் வேறு யாருக்கும் எந்த சிரமமும் ஏற்பட தேவையில்லை என்று கூறி அந்த விழாவில் நான்காம் வரிசையில் அமர்ந்து விட்டு பாதையிலே சென்று விட்டதாகவும் அந்தனன் குறிப்பிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் சிம்புவும் நடித்திருக்கலாம் ஆனால் நயன்தாராவால் அது பறிபோய் விட்டதாக வலைப்பைச் சார்ந்தனன் குற்றம் சாட்டி உள்ளார்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top