Monday, October 2, 2023
- Advertisement -
HomeEntertainmentஒரு காலத்துல பாலிவுட்டயே திரும்பி பார்க்க வச்ச இயக்குநர்.. பாவம் ஏஆர் முருகதாஸ்.. இறங்கி வந்த...

ஒரு காலத்துல பாலிவுட்டயே திரும்பி பார்க்க வச்ச இயக்குநர்.. பாவம் ஏஆர் முருகதாஸ்.. இறங்கி வந்த சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்கள் வசூல்மழை பொழிந்த நிலையில், அவரது பிரின்ஸ் படம் சொதப்பியது. இந்தப் படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்த்த சிவகார்த்திகேயனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதைதொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

மாவீரன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்து, அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள அயலான் படமும் விரைவில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலின் தயாரிப்பிலும் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.

- Advertisement -

விரைவில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றபோதிலும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்காக தன்னுடைய வழக்கமான சம்பளத்தில் இருந்து 5 கோடி ரூபாயை சிவகார்த்திகேயன் குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல இந்தப் படத்திற்காக இயக்குநர் ஏஆர் முருகதாசும் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தை லைட் ஹவுஸ் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கஜினி, துப்பாக்கி என கோலிவுட்டின் எவர்கிரீன் படங்களை கொடுத்த ஏஆர் முருகதாசின் இயக்கத்தில் வெளியான ரஜினியின் தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து கம்பேக் கொடுக்கும் முயற்சியில் ஏஆர் முருகதாகஸ் தற்போது ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் அவரது முந்தைய படங்களை போல மிகச்சிறந்த வெற்றியை பெற்றால், ஏஆர் முருகதாஸ் மீண்டும் கோலிவுட்டின் முக்கிய இயக்குநராக வலம் வருவார். சீனியர் ஹீரோக்கள் ஒதுக்கிய நிலையில், சிவகார்த்திகேயன் மட்டுமே அவரை நம்பி படம் செய்ய ஒத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Most Popular