சினிமா

“அப்புவே ஜோடி போட்டு இருக்காங்களா ரெண்டு பேரும்” ……. தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மனைவியுடன் இருக்கும் குழந்தை பருவ புகைப்படம் !

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் கதாநாயகராக விளங்கி வருபவர் சிவா கார்த்திகேயன் . விஜய் டிவியில்  பொறுப்பாளராக தனது பணியை தொடங்கிய இவர்  இன்று தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் .

தற்போது இவரது நடிப்பில் மாவீரன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது . இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் . இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக  இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருக்கிறார்

Advertisement

இதனைத் தொடர்ந்து அயலான் என்ற சயின்ஸ் பிக்சன்  திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சிவா கார்த்திகேயன் . தீனா முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் . இணையதளத்தில் அவ்வப்போது ரசிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகும் . அதேபோன்று இவரது புகைப்படமும் அவ்வப்போது வெளியாகிறது .

தற்போது சிவா கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவியின்  குழந்தை பருவ புகைப்படம் வெளியாகியிருக்கிறது . சிவா கார்த்திகேயன் அவரது உறவுக்கார பெண்ணைத்தான் திருமணம் செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது . அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்ற போது எடுத்த போட்டோ ஒன்று  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

Advertisement

இந்த புகைப்படங்களை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் . நடிகரின் குழந்தை பருவ புகைப்படங்களை பார்த்திருப்போம் அல்லது நடிகையின் குழந்தை பருவ புகைப்படங்களை பார்த்திருப்போம் . ஆனால் முதல் முறையாக நடிகர் அவரது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் குழந்தை பருவத்தில் தற்போது தான் வெளியாகி இருக்கிறது . இதன் காரணமாகவே இந்த புகைப்படம் ரசிகர்களிடம் ட்ரெண்ட் ஆகி உள்ளது .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top