இன்று தனது 38வது பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். சிவகார்த்திகேயேன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள மாவீரன் பட முதல் பாடலும் செம்ம மாஸாக வெளியானது. பரத் ஷங்கர் இசையில் அனிருத் பாடியுள்ள இந்தப் பாடல், மரண மாஸ்ஸாக உருவாகியுள்ளது. “சீன் ஆஹ்… சீன் ஆஹ்” எனத் தொடங்கும் இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மாவீரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயனுக்கு அதிதி ஷங்கர் வாழ்த்து சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை மாவீரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடினார்.
அப்போது இயக்குநர் மடோன் அஸ்வின், மிஷ்கின் ஆகியோருடன் நாயகி அதிதி ஷங்கரும் கலந்துகொண்டார். அதிதி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் கேக் ஊட்டி விட, அவர்களும் சிவாவுக்கு கேக் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர். மாவீரன் செட்டில் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
விருமன் படத்தில் பாவடை, தாவணியுடன் கிராமத்து பெண்ணாக வலம் வந்த அதிதி ஷங்கர், மாவீரன் படத்தில் மாடர்ன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே லுக்கில் அதிதி ஷங்கர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே கவர்ந்து வருகிறது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ்காக ஒரு படம், வெங்கட் பிரபு, ஏஆர் முருகதாஸ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
