Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாஅட.. ஒரு மாதத்தில் ரீலீஸ் தேதியை வைத்துக் கொண்டு இப்போ தான் ஷூட்டிங் முடியுதா.. !...

அட.. ஒரு மாதத்தில் ரீலீஸ் தேதியை வைத்துக் கொண்டு இப்போ தான் ஷூட்டிங் முடியுதா.. ! திட்டமிட்ட படி மாவீரன் படம் வருமா.. ?

கோலிவுட்டில் அடுத்து வரவிருக்கும் பெரிய படங்களில் ஒன்று தான் மாவீரன். சிவகார்த்திகேயனின் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்புகள் ஏராளம். அதற்கு இயக்குனர் மடோன் அஷ்வினும் மிகப் பெரிய காரணம். முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற மாபெரும் பெருமைக்குச் சொந்தக்காரர். யோகி பாபு ஹீரோவாக நடித்த மண்டேலா திரைப்படம் லால்டவுனில் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.

- Advertisement -

இயக்குனர் மடோன் அஷ்வின் உடனே தன் அடுத்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனுடன் உறுதி செய்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஒரு வருடமாக போய்க் கொண்டிருக்கிறது. இடையே சிவகார்த்திகேயன் தன் அடுத்த 2 படங்களின் அறிவிப்பையும் வழங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரன் படம் முதலில் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் பின்னர் ஒரு மாதம் முன் கூட்டி ஜூலை 14ஆம் தேதிக்கு மாற்றிவிட்டனர். படத்தை முழுமையாக முடிக்க காலம் குறைந்தது படக்குழுவுக்கு. அண்மையில் மாவீரன் படத்தில் இருந்து சிறப்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இத்தனை மாதங்களாக நடந்து கொண்டிருந்த மாவீரன் ஷூட்டிங் வேலை இன்றுடன் முடிவடைந்துள்ளது.

- Advertisement -

அதை பெரிய கேக் வெட்டிக் கொண்டாடினர். அந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இன்னும் பட ரீலீசுக்கு வெறும் ஒரு மாதமே இருக்கின்ற வேளையில் இப்போது படத்தை முடித்தால் எப்போது மற்ற வேலைகளை நிறைவு செய்து சரியான நேரத்தில் வெளியிடுவர் என்ற கேள்வி சிலருக்கு எழுந்துள்ளது.

- Advertisement -

ஷூட்டிங்கை முடித்த மாவீரன் குழு உடனே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் குதிக்கவுள்ளது. அந்த வேலைகளை செய்துக் கொண்டே சான்றிதழ் பெறுவது, புரொமோஷன் என இதர பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வனைத்தையும் திட்டமிட்டபடி நிச்சயம் முடிக்க இயலும். அறிவித்தபடி ஜூலை 14ஆம் தேதி படம் உலகெங்கும் வெளியாகும்.

சிவகார்த்திகேயன், அதித்தி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு, கவுண்டமணி உள்ளிட்டோர் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஜூலை 14ஆம் தேதி கடும் போட்டியையும் இப்படம் எதிர்கொள்கிறது. ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அஹமத் இயக்கத்தில் இறைவன் என்ற படத்துடன் மோதுகிறது. மேலும் மிகுந்த பிரம்மாண்டமான மற்றும் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் மிஸ்ஸன் இம்பாசிபில் 7வது பாகமும் அன்று வெளியாகிறது.

Most Popular