Monday, December 4, 2023
- Advertisement -
HomeEntertainmentசிவகார்த்திகேயன் தயாரிப்பில் களமிறங்கும் பிரபல நடிகர்… "எதிர்பாராத கூட்டணி" உற்சாகத்தில் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் களமிறங்கும் பிரபல நடிகர்… “எதிர்பாராத கூட்டணி” உற்சாகத்தில் ரசிகர்கள்!

கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ படம் வெளியானது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது. இந்தப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழியில் உருவான ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ஜதி ரத்னலு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்தால் ரசிகர்கள் இந்தப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர். மேலும் முதன்முறையாக தீபாவளி வெளியீடாக ரிலீசாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் ரசிகர்கள் குஷியானார்கள்.ஆனால் பிரின்ஸ் படம் வெளியான ஒரே வாரத்தில் பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு அதிர்ச்சி கொடுத்தது.

இதனைதொடர்ந்து தான் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். யோகி பாபு நடிப்பில் வெளியாகி விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின், தனது இரண்டாவது படைப்பாக ‘மாவீரன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.

- Advertisement -

சிவகார்த்திகேயனுடன் பிரபல இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் இதன் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியுள்ளது. நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் சிவகார்த்திகேயன் முனைப்பு காட்டி வருகிறார்.

- Advertisement -

எஸ்கே புரொடக்சன்ஸ் தயாரித்த ’கனா’, ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’, ’வாழ்’, ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகிறது. காலை 10 மணிக்கு படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், மாலை ஐந்து மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கலையரசன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular