Monday, December 11, 2023
- Advertisement -
HomeEntertainmentலியோ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் சிவகார்த்திகேயன்.. கூடவே சாய் பல்லவியும் போறாங்களாம்.. எதுக்குனு தெரியுமா?

லியோ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் சிவகார்த்திகேயன்.. கூடவே சாய் பல்லவியும் போறாங்களாம்.. எதுக்குனு தெரியுமா?

- Advertisement -

டாக்டர் படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கடந்தாண்டில் டான், பிரின்ஸ் என இரண்டு படங்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் எஸ்கே ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.

மாவீரன் படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வரவிருப்பதால், விரைவில் எஸ்கே 24 படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் எஸ்கே 24 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிப்பது மட்டுமே இதுவரை உறுதியாகியுள்ளது.

- Advertisement -

ரங்கூன் திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமி, எஸ்கே 24 படத்தை இயக்குவதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் தொடங்கவுள்ளதாம். விஜய்யின் லியோ டீம் தற்போது காஷ்மீரில் தான் முகாமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகிறது. தற்போது அதே ஸ்பாட்டில் எஸ்கே 24 ஷூட்டிங்கும் தொடங்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

லியோ திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் உருவாகவுள்ளதாகவும், கமல் ஒரு கேமியோ ரோலில் நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் தயாரிக்கும் எஸ்கே 24 ஷூட் காஷ்மீரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. எஸ்கே 24 ஷூட்டிங் தொடங்கும் முன்னர் மாவீரன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவுள்ளதாம்.

முன்னதாக சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியிருந்தது. பரத் ஷங்கர் இசையில் அனிருத் பாடிய இந்தப் பாடல் ரசிகர்களின் வைபை தெறிக்கவிட்டது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கடந்தாண்டு வெளியான சிவகார்த்திகேயனின் டான் படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிட்டது.

இந்தப் படம் ஓடாது என நினைத்தேன், ஆனால், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலித்ததாக உதயநிதி ஒரு பேட்டியில் ஜாலியாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, மாவீரன் தியேட்டர் ரைட்ஸையும் ரெட் ஜெயன்ட் வாங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் ரம்ஜான் அல்லது பக்ரீத் ஸ்பெஷலாக ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular