ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் அப்பாவைப் போலவே சினிமாவில் ஈடுபடு இருந்ததால், ரஜினியை வைத்து கோச்சடையானும், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படமும் இயக்கினார். ஆனால் இருவருக்கு எதிர்பர்த்த வெற்றி கிட்டவில்லை. இதையடுத்து, இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கினார்.
சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது. பின் சௌந்தர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது இந்த குழந்தைக்கு வேத் கிருஷ்ணா என பெயர் வைத்தனர் பிறந்தது. ஏற்கனேவே சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. பின் இதன் காரணமாக சௌந்தர்யா பெற்றோர் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விட்டார்.
பிறகு இவர்கள் இருவருக்கும் தங்கி மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்திருந்தனர். பின்னர் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். அதுக்கு பின் சௌந்தர்யா தன்னுடைய மகன் வேத்துடன் ரஜினிகாந்த் வீட்டில் தான் வசித்து வந்தார்.
இதையடுத்து, 2019ம் ஆண்டு நடிகர் விசாகன் வணங்காமுடியை மறுமணம் செய்து அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த், திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவரது அக்கா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே தனது தந்தையை வைத்து லால் சலாம் படத்தை எடுத்து வரும் நிலையில், சௌந்தர்யா புதிதாக வெப் தொடர் ஒன்றை இயக்கி இருக்கிறார். ஓடிடி தளம் ஒன்றுக்காக உருவாகும் இந்த வெப் தொடரில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.