Monday, October 2, 2023
- Advertisement -
HomeEntertainmentஅடேங்கப்பா… ஏகே 62 படத்தின் தலைப்பு இதுதானா… மிரட்டலா இருக்கே.. அஜித் ரசிகர்கள் உற்சாகம்!

அடேங்கப்பா… ஏகே 62 படத்தின் தலைப்பு இதுதானா… மிரட்டலா இருக்கே.. அஜித் ரசிகர்கள் உற்சாகம்!

அஜித் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு தன் அடுத்த படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் AK62 படத்தில் பல குளறுபடிகள் நடந்துவிட்டன. ஆரம்பத்தில் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் தான் அஜித் AK62 படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது அதிரடியாக AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார். இதற்கு விக்னேஷ் சிவனுடன் தயாரிப்பு நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட மனக்கசப்பே காரணம் எனக் கூறப்படும் நிலையில், உண்மை என்ன என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.

ஆனால் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டது மட்டும் உறுதியாகிவுள்ளது. இதையடுத்து பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் திடீரென மகிழ் திருமேனி அஜித்தை சந்தித்து கதையை கூறி ஓகே செய்துள்ளார். வெங்கட் பிரபு, விஷ்ணு வர்தன் என இருவரில் ஒருவர் தான் அஜித்தின் AK62 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மகிழ் திருமேனியை அஜித் ஓகே செய்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் மகிழ் திருமேனி கூறிய கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்ன அஜித் அவருக்கு சில கண்டிஷன்களையும் விதித்துள்ளார்.

- Advertisement -

அதாவது படத்தை ஐந்தே மாதத்திற்குள் முடித்துவிட்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என அஜித் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதற்கெல்லாம் சம்மதம் தெரிவித்து மகிழ் திருமேனி வேலைகளை ஆரம்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் AK62 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் AK62 படத்திற்காக மகிழ் திருமேனி மூன்று தலைப்புகளை ரெடி செய்து வைத்ததாகவும், அதில் ஒன்றை அஜித் தேர்வு செய்வார் எனவும் பேசப்பட்டு வந்தது. தற்போது அஜித் AK62 படத்திற்கான டைட்டிலை தேர்வு செய்து விட்டாராம்.

மகிழ் திருமேனி தயார் செய்த மூன்று டைட்டில்களில் டெவில் (Devil) என்ற டைட்டிலை தான் அஜித் தேர்வு செய்துள்ளாராம். எனவே அஜித் தன் படத்திற்கு ஆங்கிலத்தில் டைட்டில் வைத்ததை அடுத்து சில ரசிகர்கள் விஜய்யின் லியோ படத்திற்கு போட்டியாக அஜித் இந்த டைட்டிலை வைத்துள்ளாரா எனக் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் விரைவில் AK62 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு டைட்டிலுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Most Popular