இந்த வருடம் முழுவதும் லியோவை பற்றிய பேச்சு தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த டிசம்பர் மாதம் பூஜை துவங்கியதிலிருந்து லியோவை பற்றிய பேச்சுக்கள் அதிகமாகியுள்ளன. மேலும் படக்குழுவும் அவ்வப்போது புகைப்படங்களையோ, அறிவிப்புகளையோ வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகின்றது.
பர்த்டே பார்ட்டி, படப்பிடிப்பு தளத்தில் கேஷுவலாக எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்றவற்றை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் முதலிடத்திலேயே இருந்து வருகின்றது லியோ. மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களுக்கு இல்லாத வகையில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
அதை சரிவர பயன்படுத்தி லியோ படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் உழைத்து வருகின்றார் லோகேஷ். ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியிலும் நடைபெற உள்ளது. அதன்பின் மீண்டும் சென்னையில் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.
இந்த கிளைமேக்ஸ் காட்சிகளுக்கு முன்பாக நடிகர் விஜயுடன் கமல் ஹாசன் நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கிறார். அதேபோல் சஞ்சய் தத் இந்த படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார் . இது போக மிஸ்கின் இன்னொரு வில்லனாக நடிக்கிறார். மேலும் அர்ஜுன், கவுதம் மேனன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
இதையடுத்து சென்னை ஷூட்டிங்கில் கமல் ஹாசன் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பகத் பாசிலும் இதற்கு மழுப்பலாக பதில் அளித்து இருந்தார். அதேபோல் நரேன் சின்ன ரோலில் கிளைமேக்சில் வருவார் என்றும் கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கையில் இந்த படம் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜின் எல்சியு யுனிவர்சை சேர்ந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
