மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படத்தின் நாயகியாக கடி ஜோக்ஸ் புகழ் அதிதி ஷங்கர், இயக்குநர் மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மாவீரன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் இடையே தகராறு என சொல்லப்பட்டு வந்தன. ஆனால், ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் அதற்கெல்லாம் பதிலடி கொடுத்தது மாவீரன் படக்குழு.
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு நேற்று வெளியிட்டது. பரத் ஷங்கர் இசையில் அனிருத் பாடிய இந்தப் பாடல் ரசிகர்களின் வைபை தெறிக்கவிட்டது. “சீன்னா… சீன்னா” எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு ஷோபி மாஸ்டர் கோரியோகிராபி செய்துள்ளார். 100க்கும் மேற்பட்ட டான்ஸர்களுடன் சிவகார்த்திகேயனும் மாஸாக ஆடி பட்டையை கிளப்பியிருந்தார். குத்து பாடலாக உருவாகியுள்ள மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள், தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மாவீரன் தியேட்டர் ரைட்ஸ் வாங்குவதில் கடும் போட்டி காணப்படுகிறதாம். கிட்டத்தட்ட 80ஸில் இருக்கும் ரஜினியை போல் சிவகார்த்திகேயன் இருப்பதால், படம் நிச்சயம் பக்கா மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரின்ஸ் படம் கொடுத்த தோல்வியை, மாவீரன் படம் எளிதாக மறக்கப்படிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதனிடையே மாவீரன் படம் வரும் ஏப்ரல் மாத இறுதியில் ரம்ஜான் பண்டிகையின் போது ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரம்ஜான் கொண்டாட்டம், கோடை விடுமுறை என்று இருப்பதால், பெரிய கலெக்ஷனை அள்ளலாம் என்று படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதேநேரம் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. பெரிய படத்துடன் மாவீரன் படம் களமிறக்கப்பட்டால், சேதாரமாக வாய்ப்புள்ள பார்க்கப்படுகிறது.
அதேபோல் மாவீரன் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் சார்பாக ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இன்னொரு போட்டியாக மாவீரன் ரிலீஸ் செய்யப்பட்டால் திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று படக்குழு எதிர்பார்த்துள்ளது.
