Entertainment

“காட்டுப்பசிக்கு விருந்து” சிம்புவுடன் இணையும் தேசிங்கு பெரியசாமி.. அட்ரா சக்க அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்!

COMMENTS

நடிகர் துல்கர் சல்மானின் 25வது படமாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கடந்த 2020ம் ஆண்டில் வெளியானது. காதல் மற்றும் த்ரில்லர் படமாக வெளியான இந்தப் படம் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசி மூலம் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.

இதையடுத்து தேசிங்கு பெரியசாமி நடிகர் ரஜினிகாந்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதையடுத்து ரஜினிகாந்த்தை நெல்சன் திலீப்குமார் தற்போது இயக்கி வருகிறார்.

Advertisement

அவர் ரஜினியுடன் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஞானவேலுடன் இணையவுள்ளார். இதையடுத்து ரஜினிக்காக ஸ்கிரிப்டை உருவாக்கி காத்திருந்த தேசிங்கு பெரியசாமி, அந்த ஸ்கிரிப்டில் சிம்புவை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு, ஓபிலி கிருஷ்ணாவுடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertisement

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்!” என பதிவிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கனவு நனவானது” என பதிவிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top