சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அதனால் தற்போதைக்கு சூர்யா 42 என்று அழைத்து வருகிறார்கள். அந்த படம் மூலம் பாலிவுட் நடிகைகளான திஷா பதானி மற்றம் மிருணாள் தாகூர் ஆகியோர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்கள்.
கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட சூர்யா 42 படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சூர்யா ஜோடியாக திஷா பதானியும் காமெடி கேரக்டரில் யோகி பாபுவும் நடித்து வருகின்றனர். மற்ற நடிகர்கள் பற்றிய அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், சூர்யா 42 டைட்டில் க்ளிம்ப்ஸ் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாவதாக டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
சூர்யா 42 டைட்டில் க்ளிம்ப்ஸ் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகிறது என்ற போஸ்டரை ரசிகர்களும் வைரலாக்கி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா உட்பட யாரும் இதுபற்றி அப்டேட்டை வெளியிடவில்லை.
இந்நிலையில், விரைவில் சூர்யா 42 அப்டேட்டை படக்குழுவே வெளியிடும் என சொல்லப்படுகிறது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக இந்தப் படத்திற்காக சூர்யா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி வைரலானது. சூர்யா 42 திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.