Monday, December 4, 2023
- Advertisement -
HomeEntertainmentஇது லிஸ்ட்-லயே இல்லையே.. சூடுபிடிக்கும் வாடிவாசல் பிசினஸ்.. சூர்யா படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்!

இது லிஸ்ட்-லயே இல்லையே.. சூடுபிடிக்கும் வாடிவாசல் பிசினஸ்.. சூர்யா படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்!

‘அசுரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூரியை வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி ஆரம்பித்தார் வெற்றிமாறன். இந்தப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்தப்படத்தை முடித்ததும் சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்திற்கான பணிகளை துவங்குவதில் மும்முரமாக இருந்தார் வெற்றிமாறன்.

- Advertisement -

இதனை தொடர்ந்து ‘வாடிவாசல்’ படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. அதனை தொடர்ந்து சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வாடிவாசல்’ படத்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெற்று வேறலெவலில் இணையத்தில் வைரலானது. இதனிடையில் பாலாவின் ‘வணங்கான்’ படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் அந்தப்படத்திலிருந்து சூர்யா விலகினார்.

இதனையடுத்து தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். ’சூர்யா 42’ படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 3டியில் சரித்திர படமாக 10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெறுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் சூர்யா இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

வாடி வாசலுக்காக இசையமைக்கும் ஜிவி பிரகாஷ் குமார், ஏற்கனவே பாடல் வேளைகளை முடித்து விட்டதாகவும், இதன் ஆடியோ உரிமை பெரிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விடுதலைப் படத்தையும் வெற்றிமாறன் முடித்து இருப்பதால் வாடிவாசலுக்கான பணிகளை அவர் தொடங்கி விட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையே சுதா கொங்கராவின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை சூர்யா விரைவில் தொடங்கவுள்ளதால், ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் என செய்திகள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகின.

- Advertisement -

ஆனால் தற்போது மார்ச் மாதத்திற்கு பிறகு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற்ற பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு சில மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்ள வெற்றிமாறன் முடிவெடுத்துள்ளாராம். அந்த இரண்டு மாத இடைவெளியில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவும் சூர்யா திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

Most Popular