சினிமா

அஜித்துக்கு தண்ணீ காட்டிய சூர்யா படம்; 500 கோடியா!!… இது நம்ம லிஸ்ட்லயே இல்லீயேப்பா!!!…

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அதனால் தற்போதைக்கு சூர்யா 42 என்று அழைத்து வருகிறார்கள். அந்த படம் மூலம் பாலிவுட் நடிகைகளான திஷா பதானி மற்றம் மிருணாள் தாகூர் ஆகியோர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்கள்.

Advertisement


இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூர்யா 42 படம் ரிலீஸாவதற்கு முன்பே ரூ. 500 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல், சாட்டிலைட், இசை, தியேட்டர் உரிமைகள் எல்லாம் ரூ. 500 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். ஒரு தமிழ் படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 500 கோடி வசூல் செய்திருப்பது லியோவுக்கு பிறகு இது தான். இதன் மூலம் அஜித் வியாபாரத்தை சூர்யா 42 படம் முறியடித்திருக்கிறது.


இது குறித்து அறிந்த சூர்யா ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படம் தான் ரிலீஸுக்கு முன்பே அதிகம் வசூல் செய்த படம் என்று பேசப்பட்டது. லியோ படத்தின் உரிமைகளை ரூ. 500 கோடிக்கு விற்றிருக்கிறார்களாம்.

Advertisement

சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் சேர்ந்து யுவி கிரியேஷன்ஸும் சூர்யா 42 படத்தை தயாரித்து வருகிறது. படத்திற்கு டி.எஸ்.பி. இசையமைக்கிறார். சூர்யா 42 படத்தை 10 மொழிகளில் ரிலீஸ் செய்யப் போகிறார்கள். அந்த படத்தில் 5 கதாபாத்திரங்களில் வருகிறாராம் சூர்யா. ஒரு சூர்யாவை பார்த்தாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள்.

இதில் 5 கதாபாத்திரங்கள் என்றால் சொல்லவா வேண்டும். ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கப் போகிறது.படத்தில் 12 கெட்டப்புகளில் வந்து அசத்தப் போகிறாராம் சூர்யா. படப்பிடிப்பு சத்திமில்லாமல் நடந்து வந்தாலும் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தி ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப் போகிறார்களாம்.


சூர்யா 42 படம் சத்தமில்லாமல் லியோவின் சாதனையை சம்பவம் செய்தது குறித்து தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னப்பா அஜித் படத்தை விட சூர்யா படம் அதிகம் வசூல் செய்துவிட்டதாமே. சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சூர்யாவுக்கு இது நல்ல விஷயம். அவர் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறட்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

லியோ குறித்து தொடர்ந்து அப்டேட் வருகிறது. அது போன்று இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது ஒரு அப்டேட் கொடுங்க சிவா என சூர்யா ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top