Wednesday, April 24, 2024
- Advertisement -
Homeசினிமாகொடைக்கானலில் கங்குவா குழு.. உற்சாகத்தில் சூர்யா! விவரம்

கொடைக்கானலில் கங்குவா குழு.. உற்சாகத்தில் சூர்யா! விவரம்

நடிகர் சூர்யா திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக கங்குவா திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மலையாளம், கன்னடம் என பத்து மொழிகளில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது.

- Advertisement -

இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக படம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.  இந்த படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடைபெற்ற இருக்கிறதாம்.
குறிப்பாக கொடைக்கானலில் 22 நாட்கள் ஷூட்டிங் நடத்த படக்குழு அங்கு சென்று இருந்தது. இங்கு படத்தின் முக்கிய காட்சிகளை இயக்குனர் சிவா எடுத்திருக்கிறார். இதில் படமாக்கப்பட்ட காட்சிகளை நடிகர் சூர்யா உள்ளிட்டோர் பார்த்திருக்கிறார்கள். அது மனதிற்கு நெருக்கமாக வகையில் சிறப்பாக வந்திருக்கிறது.

- Advertisement -

இதனால் படக்குழு உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இன்னும் மூன்று மாத காலம் படப்பிடிப்பு பணி பாக்கி இருக்கிறது. இதே போன்று ஒரு பக்கம் சூட்டிங் நடக்க மறுபக்கம் எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் என தீவிரமாக பட குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இதனால் நினைத்ததை விட கங்குவா திரைப்படம் மிக விரைவில் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நடிகர் சூர்யா கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

தற்போது கங்குவா திரைப்படமும் தாமதமானால் அது சிகர்களை ஏமாற்றும் வகையில் அமைந்துவிடும் என்பதற்காக பட குழு பம்பரம் போல் சுழன்று வருகிறார்கள். சூர்யா, பாலா படத்தில் தனது தேதியை வீணடித்து விட்டதால் தற்போது இவ்வளவு பெரிய கேப் ஏற்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Most Popular