எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் மாணவர் சிவா கார்த்திகேயன். அதற்கு முன் வெளியான முழு திரைப்படத்தில் காமெடி நடிகராக தனுசுடன் இணைந்து நடித்திருப்பார். எதிர்நீச்சல் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து இன்று தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் சிவா கார்த்திகேயன் . விஜய் மற்றும் அஜித்திற்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டவர் இவர் என்றாலும் மிகையாகாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்திருப்பவர் அவர்.
அவரது நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படம் வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்த நிலையில் திரைப்படத்தின் ப்ரோமோ பணிகள் குழுவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமேசான் பிரைம் நிறுவனம் இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமைகளை வாங்கியது நாம் அறிந்ததே . திரைப்படத்திற்கான சேட்டிலைட் ரைட்ஸ்களை சன் டிவி மிகப்பெரிய தொகை ஒன்று கொடுத்து வாங்கி இருக்கிறது. இந்தத் திரைப்படம் 1986 இல் வெளியான சூப்பர் ஸ்டாரின் மாவீரன் திரைப்படத்தின் ரீமேக் ஆக இருக்கலாம் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மண்டேலா திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்ற மடோனா அஸ்வின் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில் சிவா கார்த்திகேயனுடன் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இயக்குனர் மிஸ்கின் யோகி பாபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கவுண்டமணி சுனில் மற்றும் சரிதா ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு பாரத் ஷங்கர் என்பவர் இசையமைத்திருக்கிறார். இம்மாத இறுதியில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கான ரிலீஸ் தேதியை பற்றிய அறிவிப்பு எதையும் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிடவில்லை .
சில மாதங்களுக்கு முன் வெளியான சிவகார்த்திகேயனின் பிரண்ட்ஸ் திரைப்படம் தோல்வியை தழுவினாலும் அவருக்கான சினிமா மார்க்கெட் இன்னும் உச்சத்திலேயே இருக்கிறது என்பதை இத் திரைப்படத்திற்காக வியாபாரம் காட்டுகிறது. அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொகையை கொடுத்து ஓடிடி உரிமைகளை வாங்கியுள்ள நிலையில் சன் டிவியும் இதன் சேட்டிலைட் உரிமைகளை மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருப்பதாக தெரிகிறது. மேலும் தியேட்டர் ரிலீசிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டிருப்பது சினிமா உனக்கு நிறைய ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. சிவா கார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் 83 கோடி ரூபாய்க்கு தியேட்டர்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது அவருக்கு ஒரு திரைப்படம் தோல்வியடைந்த போதும் அதற்கு அடுத்த படம் வியாபார ரீதியாக ரிலீஸ் ஆவதற்கு முன்பே மிகப்பெரிய கலெக்ஷனை எட்டி இருப்பது தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய நட்சத்திரம் ஜீவா கார்த்திகேயன் தான் என்பதை காட்டுவதாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மாவீரன் திரைப்படத்தினை தொடர்ந்து அயலான் என்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவா கார்த்திகேயன். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகும் இந்த திரைப்படம் இந்த வருடத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் அவர் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் வெகு விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.