Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாஉலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய விஞ்ஞானியின் வரலாற்று திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் தமிழ் சினிமாவின்...

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய விஞ்ஞானியின் வரலாற்று திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்!,

தமிழ் சினிமாவில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மாதவன். அதனைத் தொடர்ந்து டும் டும் டும் ஜே.ஜே பிரியமான தோழி என காதல் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தவர் மாதவன். ரன் திரைப்படத்தின் மூலம் ஆக்சன் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் 3 இடியட்ஸ் மற்றும் ரங்கு தே பசந்தி போன்ற மிகச் சிறந்த வெற்றிப் படங்களில் நடித்திருப்பவர். சமீபகாலமாக இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். விருது நடிப்பில் உருவான இறுதி சுற்று திரைப்படம் வித்தியாசமான கதையும் சத்தை கொண்டதோடு மாதவனை ஒரு வித்தியாசமான வடிவத்திலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது .

- Advertisement -

பயோபிக் என்று சொல்லப்படும் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் சில காலமாகவே இந்திய சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட எம் எஸ் தோனி த அன்டோல்ட் ஸ்டோரி தமிழ் ரசிகர்களிடமும் இந்திய ரசிகர்களிடமும் மிகச் சிறந்த வரவேற்பு பெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சூரரைப் போற்று என்ற திரைப்படம் ஏர் டேகான் மன சேவையை நிறுவிய கேப்டன் ஜி ஆர் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பல தேசிய விருதுகளை வாங்கியது நமக்கு நினைவு இருக்கலாம்.

கடந்த வருடம் வெளியான ராக்கெட்டரி என்ற திரைப்படத்திற்கும் ரசிகர்களிடம் அமோக ஆதரவு இருந்தது. இந்தத் திரைப்படம் ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தில் மாதவன் ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானி நம்பினாராயணன் கதாபாத்திரத்தில் மிகவும் பத்துரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா மேலும் ஒரு வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த முறையும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாளரை பற்றிய திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தியாவின் ஆல்வா எடிசன் என அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி நாயுடு அறிவியல் துறையிலும் எந்திரவியல் துறையிலும் பல சாதனைகளைப் படைத்தவர். 1893 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த இவர் யுனைட்டட் மோட்டார் சர்வீசஸ் என்ற நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் வாகனங்கள் தொடர்புடைய பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர். வெட்டுக்காயின்றி முகச் சவரம் செய்யும் பிளேடுகள் இவரது கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தவையாகும். இவற்றிற்கான காப்புரிமையை அமெரிக்காவைச் சார்ந்த ஒரு நிறுவனம் ஒரு லட்சம் டாலருக்கு கேட்டும் அதனை கொடுக்க மறுத்து விட்டார் ஜிடி நாயுடு . ஜெர்மனியில் நடைபெற்ற கண்டுபிடிப்புகளுக்கான பொருட்காட்சியில் இவரது பிளேடுகளுக்கு முதலாவது பரிசும் மூன்றாவது பரிசும் கிடைத்தது.

- Advertisement -

இத்தகைய பெருமைகளை உடைய மிகப்பெரிய விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றை தற்போது திரைப்படமாக தயாரிக்க இருக்கின்றார்கள். மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தத் திரைப்படத்தினை தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தில் ஆர்.மாதவன் விஞ்ஞானி ஜிடி நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் . இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் நேற்று வெளியாகி இருக்கிறது. படத்தின் மற்ற கலைஞர்கள் மற்றும் நடிகர்களை பற்றிய அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Popular