Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 68 படத்தில் ஹீரோயின் யார்.. ? 4 நடிகைகளுடன் பேச்சுவார்த்தை.. !

தளபதி 68 படத்தில் ஹீரோயின் யார்.. ? 4 நடிகைகளுடன் பேச்சுவார்த்தை.. !

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்புக்குக் கீழ் பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக கைக்கோர்த்துள்ளார் நடிகர் விஜய். விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஜய் – வெங்கட் பிரபு – யுவன் காம்போ இணைகிறது. விஜய்யை இயக்க வேண்டுமென்ற வெங்கட் பிரபுவின் வெகு ஆண்டுகள் ஆசையும் நிறைவேறியுள்ளது.

- Advertisement -

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒன்றரை மாதத்தில் இந்தப் படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிவடைந்து அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜைக்கு உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படம் முடிந்த உடனே எந்த ஒரு ஓய்வும் எடுக்காமல் அடுத்த படத்தை துவங்குகிறார் தளபதி.

விஜய் – வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரீலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உறுதியானால் மெர்சல் படத்துக்குப் பின் விஜய்யுடன் 2வது முறையாக இணைவார்.

- Advertisement -

தளபதி 68 ஹீரோயின்

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க மூன்று நான்கு நடிகைகளுடன் கலந்து பேச வெங்கட் பிரபு & கோ திட்டமிட்டுள்ளது. புதிய காம்போவை ஸ்க்ரீனில் காட்ட வெங்கட் பிரபு தீவிரமாக இருக்கிறார். இப்போதைக்கு அதிகாரபூர்வமாக இல்லாமல் ஓர் பட்டியல் வெளியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -

சீதா ராமம் படத்தின் மூலமாக மற்றும் ஹாட்டன புகைப்படங்கள் மூலம் சுண்டி இழுக்கும் ம்ருனால் தாக்கூர், ஏற்கனவே வெங்கட் பிரபுவுடன்‌ பணிபுரிந்த இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி, அழகு தேவதை பிரியங்கா அருள் மோம் ஆகியோர் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் தவிர தமன்னா அல்லது நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகுந்த வட்டாரங்களில் பேசுகின்றனர்.

Most Popular