லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்புக்குள் அடங்கிய லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகியது. விமர்சன ரீதியாக இரண்டாம் பாதிக்கு சற்று சறுக்கலான வார்த்தைகளே கிடைத்தாலும் வர்த்தக ரீதியாக வசூலில் வேட்டையாடியது. உலகளவில் 600 கோடிகளை அள்ளி பல சாதனைகளை தகர்த்தது.
லியோ படத்தின் வெளியீட்டுக்கு முன்னே தளபதி விஜய் தன் வெளிநாட்டு பயணங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு தளபதி 68 படத்தின் ஷூட்டிங்கையே துவங்கிவிட்டார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்தின் பூஜை வீடியோ மற்றும் நடிப்போர்களின் பட்டியலுடன் அப்டேட்டைத் துவங்கியது படக்குழு. தாய்லாந்தில் நடந்து வந்த ஷூட்டிங்கில் தளபதி விஜய் தன் பணிகளைச் சிறப்பாக முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். மீதம் இருக்கும் காட்சிகளை நிறைவு செய்துவிட்டு வெங்கட் பிரபு & கோ நாடு திரும்பும்.
அடுத்தடுத்த ஷூட்டிங் சென்னையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஜய்யுடன் பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், யோகி பாபு, மீனாட்சி சவுத்ரி, ஸ்னேஹா, லைலா என பெரிய பட்டாளமே நடிக்கிறது. இந்தப் பட்டியலைக் கண்ட ரசிகர்கள் மீண்டும் ஓர் குடும்பங்கள் கொண்டாடும் படமா என சிறிய பயத்தில் உள்ளனர்.
ஆனால் படத்தின் அறிவிப்பின் போத கிடைத்த தகவல் என்னவென்றால் வெங்கட் பிரபு மீண்டும் சயின்ஸ் ஃபிக்ஷன் வகையில் ஓர் படம் செய்யவுள்ளார் என தெரியவந்தது. விஜய்யை வைத்து இயக்கும் படம் டைம் டிராவல் என கூறப்படுகிறது. அதனால் தான் இரு மாதங்களுக்கு முன் படக்குழு டியேஜிங் தொழில்நுட்பத்துக்காக வெளிநாடு சென்றது.
2012ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் லூப்பர். இந்தப் படத்தைப் போலத் தான் தளபதி 68 இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன. லியோவையப் போல தளபதி 68 ஓர் முழு ரீமேக்காக உருவாகவில்லை. இதனைப் போல எதிர்பார்க்களாமே தவுர ரீமேக் இல்லை. லூப்பர் திரைப்படம் ஆக்க்ஷன் வகையைச் சார்ந்தது, ஆனால் தளபதி 68 கேஸ்ட்டிங்கைப் பார்த்தாலே அந்தப் படத்தைப் போல முழுசாக இருக்காது என்பதனை இங்கேய நாம் அறியலாம்.
மாநாடு படத்தில் டைம் லூப்பை குழப்பம் இல்லாமல் மிகவும் அழகாக எடுத்து சிம்புவுக்கு கம்பேக் வாங்கிக் கொடுத்த வெங்கட் பிரபுவின் மீது அதிகம் நம்பிக்கை வைக்கலாம். மிகவும் ஜாலியான அதே சமயம் சஸ்பென்ஸ் மற்றும் ஆக்க்ஷன் கலந்த ஓர் கமர்ஷியல் படத்தை வழங்குவார் என்பதில் எவ்வித ஐயமும் தேவையில்லை.