தமிழ் சினிமாவின் அடுத்து வரப்போகும் பெரிய படங்களின் பட்டியலில் இருக்கும் படங்களில் ஒன்று கோட். விஜய் – வெங்கட் பிரபு கம்போவில் உருவாகி வரும் இத்திரைப்படம் இறுதிக் கட்டப் பணிகளில் உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஷூட்டிங் முடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன் & புரொமோஷன் பணிகளுக்கு நகரவுள்ளது.
கோட் படத்தை எப்படியாவது சூப்பர் ஹிட்டக்க வேண்டுமென வெங்கட் பிரபு தீவிரமாக உள்ளார். படத்தில் சிவகார்த்திகேயன், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இருவர்கள் என சில பெரிய நட்சத்திரங்களை படத்திற்குள் வளைத்துப் போட்டுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கலாம்.
ஷூட்டிங் கடைசி கட்டத்தில் இருக்கும் வேளையில் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியை எங்கு எப்போது நடத்தலாம் என்ற பேச்சு வார்த்தைக்குள் படக்குழு நுழைந்துள்ளது. கடந்த ஆண்டு லியோ படத்திற்கே முதலில் மலேசியா அல்லது துபாயில் நடத்த திட்டமிட்டனர். ஆனால் சரியான தேதிகள் அமையாததால் கடைசியில் சென்னைக்கே பிளானை மாற்றினர்.
இம்முறை அந்த வெளிநாட்டு இசை வெளியீட்டு விழா நிச்சயம் மிஸ் ஆகாது போல. படக்குழு கோட் படத்தின் நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் இது போன்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களின் கவத்தை இன்னும் பெறுவதற்காக மதுரை, கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் நடத்துவார் என சிலர் நினைத்தனர்.
ஆனால் தளபதி விஜய்யோ அரசியல் தனி சினிமா தனி என்பதில் தெளிவாக உள்ளார். என்னதான் அவர் இதற்கு முன்பு இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பற்றி பேசி இருந்தாலும், தன் சுயநலத்துக்காக படத்தின் விழாவை பயன்படுத்த நினைக்கவில்லை. அரசியல் மாநாடு தனியாக மதுரையில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம், அதாவது ரீலீசுக்கு ஒரு மாதம் முன்னர் நடைபெறும். படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.