நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், அவரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்கில் நடிகர் விஜய் பெரிதும் ஆக்டிவாக இல்லை என்றாலும், அவ்வப்போது தனது படம் தொடர்பான பதிவுகளை வெளியிடுவது வழக்கம். குறிப்பாக, கடந்த 2013ஆம் ஆண்டு டிவிட்டரில் இணைந்தார். படம் சம்பந்தமான அறிவிப்புகளை விஜய் ட்வீட் போடும்போது, ரசிகர்கள் அதனை டிரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.
அதிகளவில் ட்வீட்களை போடாமல் இருந்தாலும், புதிய படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர்களை வெளியிட்டே டிவிட்டரில் அதிக ஃபாலோயர்களை வைத்துள்ளார். அவருக்கு இதுவரை 4.4 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். டிவிட்டர் ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் தொடர்ந்து இந்தியளவில் நடிகர் விஜய் முன்னிலை வகித்து வருவதும் நடிகர் விஜய் குறித்த தேடுதல் சமூக வலைதளத்தில் அதிகம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக அவர் திடீரென இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கியுள்ளார். விஜய் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே பல லட்சம் ஃபாலோயர்கள் குவிந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.
முதல் போஸ்ட் முதல் போஸ்ட் காஷ்மீரில் லியோ படப்பிடிப்பில் இருந்த போது அங்கே பனி மலை பேக்கிரவுண்டில் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட செம க்யூட்டான போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முதல் போஸ்ட்டாகவும் தனது ப்ரோபைல் போட்டோவாகவும் நடிகர் விஜய் வைத்துள்ள நிலையில், அவரது அழகை வர்ணித்து ஏகப்பட்ட ரசிகர்கள் எங்கள் தளபதின்னு கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடனடியாக தனது லைக்கை பதிவு செய்திருக்கிறார். மேலும், ஏகப்பட்ட சினிமா பிரபலங்களே ரசிகர்களாக மாறி விஜய்யின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான கீர்த்தி சுரேஷ் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த அடுத்த நிமிடமே ஃபாலோயர் ஆகி உள்ளார். மேலும், தனுஷின் வாத்தி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா மேனனும் விஜய்யின் இன்ஸ்டா ஐடியை தற்போது ஃபாலோ செய்துள்ளார். ஏகப்பட்ட நடிகைகள் மற்றும் நடிகர்கள் விஜய்யின் இன்ஸ்டாகிராம் ஐடியை பின் தொடர்ந்து வருகின்றனர்.
