Monday, December 4, 2023
- Advertisement -
HomeEntertainmentலியோ போஸ்டரில் வாயில் சிகரெட் வைத்திருக்கும் விஜய்.. முக்கிய நட்சத்திரத்திற்கு கொஞ்சம் கூட சமூக பொறுப்பு...

லியோ போஸ்டரில் வாயில் சிகரெட் வைத்திருக்கும் விஜய்.. முக்கிய நட்சத்திரத்திற்கு கொஞ்சம் கூட சமூக பொறுப்பு இல்லையா? கேள்வி கேட்கும் சமூக ஆர்வலர்கள்… பதில் அளிப்பாரா தளபதி!

விஜய்யின் 67வது படமான லியோ அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால், தியேட்டர், ஓடிடி, சாட்டிலைட் ரைட்ஸ் என ப்ரீ தியேட்டர் ரிலீஸ் பிசினஸ் எகிறி உள்ளது.

- Advertisement -

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என மேக்கிங்கில் மிரட்டிய லோகேஷ் லியோவிலும் தனது ஸ்டைலில் மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தப் படம் லோகேஷின் LCU கான்செப்ட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது விக்ரம் படத்தின் முந்தைய பகுதியாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வரும் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, லியோ படத்தில் இருந்து “நா ரெடி” என்னும் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியாகி உள்ள போஸ்டரில், கையில் துப்பாக்கியுடன் மாஸ் லுக்கில் விஜய் காட்சியளிக்கிறார். ஆனால் போஸ்டரில் விஜய் வாயில் வைத்திருக்கும் சிகரெட் தான் இப்போது பேசு பொருளாகி வருகிறது.

- Advertisement -

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், முக்கிய நட்சத்திரமான விஜயிடம் இருந்து இப்படி ஒரு போஸ்டர் வெளியாகி இருப்பது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. போஸ்டரின் பின்னணியில் சிங்கத்தின் உருவமும், கையில் காப்பு என்று விஜய் மாஸாக இருந்தாலும், வாயில் வைத்திருக்கும் சிகரெட் தேவைதானா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

விஜய்யிடம் இருந்து இப்படி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் வருவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான, ‘சர்கார்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இருந்தது. இதனை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டித்திருந்தார்.

சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என விஜய் ஏற்கனவே கூறியிருந்ததை அன்புமணி சுட்டிக் காட்டியிருந்தார். இதே போல் சர்கார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைப்பது போன்று தோன்றியுள்ளதற்கு நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.

நாட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிக்கும் விஜய், கொஞ்சம் கூட சமூக பொறுப்பு இல்லாமல் பிரபலத்துக்காகவும், ரசிகர்களை கவர்வதற்காகவும் இப்படி சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிக்கலாமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். லியோவின் முதல் பாடல் வெளியீட்டு செய்தியை விட, தற்போது விஜய் வாயில் வைத்திருக்கும் சிகரெட் தான் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகிறது.

Most Popular