Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு 330 கோடி வசூல் படைத்தது உண்மையா? என்ன நடந்தது?

துணிவு 330 கோடி வசூல் படைத்தது உண்மையா? என்ன நடந்தது?

- Advertisement -

நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் 330 கோடி வசூல் செய்ததாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வந்தது.  இதனை சில ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளது. எனினும் உண்மை என்ன என்பதை தான் தற்போது பார்க்க உள்ளோம்.

துணிவு திரைப்படம் அஜித் நடித்ததிலேயே அதிக வசூலை பெற்றது என்பது உண்மைதான். இதற்கு முக்கிய காரணம் லைக்கா நிறுவனம் துணிவு திரைப்படத்தை வெளிநாட்டில் பல்வேறு திரையரங்குகளில் வெளியீட்டு நன்றாக புரமோஷன் செய்தது.

- Advertisement -

இதன் காரணமாக வெளிநாட்டில் அதிக வசூலை பெற்ற அஜித் திரைப்படம் என்ற பெருமையை துணிவு பெற்றது.

- Advertisement -

எனினும் வாரிசு திரைப்படம் 300 கோடியை தாண்டியதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் துணிவு திரைப்படம் 330 கோடி பெற்றதாக இதுவரை தயாரிப்பு நிறுவனர் இடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

உண்மையை சொல்லப்போனால் படத்தின் இயக்குனர் ஹெச். வினோத் பெயரில் உள்ள போலி ட்விட்டர் பக்கத்தில் துணிவு 330 கோடி வசூல் செய்ததாக பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த ஊடகங்கள் அந்த போலி பதிவை நம்பி தான் செய்திகள் போட்டுள்ளனர்.
இதனை அஜித் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் துணிவு திரைப்படம் 196 கோடியிலிருந்து 202 கோடி வரை தான் வசூல் செய்து இருக்கும் என்பது திரைப்பட வல்லுனர்கள் கணித்த தகவலாகும். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு மாதத்தில் கிடைக்கும் வருமானமே 400 முதல் 500 கோடி ரூபாய் தான்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இத்தகைய சாதனையை தான் ஒரு மாதத்தில் படைத்தது. வாரிசு, துணிவும் இணைந்து 500 கோடி ரூபாய் வசூலை தான் வசூல் செய்திருக்கும். ஆனால் ஊடகங்களில் வந்த போலி செய்தியின் படி 600 கோடி ரூபாய்க்கு மேல் இருபடங்களும் இணைந்து வசூல் செய்திருக்க துளியும் வாய்ப்பில்லை.

அண்டார்டிகாவில் திரையரங்குகள் அமைத்து ஏலியன்ஸ் வைத்து படத்தை ஓட்டினால் மட்டுமே இந்த அளவிற்கு வசூல் குவித்திருக்க முடியும். பொதுவாக ரெட் ஜெயின்ஸ் நிறுவனம் தங்கள் வெளியிட்ட படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது இல்லை. அதேபோல் துணிவு திரைப்படத்திலும் அவர்கள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும், இரண்டு வாரத்திற்கு பிறகு துணிவு திரைப்படத்தின் காட்சிகளும் கணிசமான அளவில் குறைக்கப்பட்டது இதனால் வாரிசுக்கு கூடுதல் காட்சிகள் கிடைத்தது இதனால் இந்த செய்தி தவறானது.  சமூக வலைத்தளத்தில் வெளியான போலி கணக்கை நம்பி பல்வேறு ஊடகங்களும் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular