சினிமா

துணிவு வாரிசு படங்களின் ஆன்லைன் டிக்கெட் விற்பனைகள் எப்போது ? வந்துவிட்டது அப்டேட்… !

Thunivu Varisu tickets

இன்னும் சரியாக ஒரு வாரத்தில், பொங்கலுக்கு 2 தினங்கள் முன் கோலிவுட்டின் நடப்பு இரு ஜாம்பவான்கள் 8 ஆண்டுகளுக்குப் பின் மோதுகின்றனர். தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து தளபதி விஜய் ‘ வாரிசு ’ என்ற ஓர் பக்கா ஃபேமிலி கமர்ஷியல் செய்துள்ளார். மறுபக்கம் அஜித்குமார், தொடர்ந்து மூன்றாவது முறை ஹெச்.வினோத்துடன் இணைந்து துணிவு எனும் வங்கிக் கொள்ளை பற்றிய படத்தில் நடித்துள்ளார்.

இரு படங்களின் ஆல்பமும், டிரைலரும் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் ரீலீஸ் தேதியை இருவரும் வெளியிடவே இல்லை. நேற்று மாலை வாரிசு படத்தின் டிரெய்லர் வந்தது, அது ரீலீஸ் ஆன அடுத்த ஒரு மணி நேரத்தில் துணிவு பட தயாரிப்பாளர் போனி கபூர் தன் படத்தின் ரீலீஸ் தேதி ஜனவரி 11 என அறிவித்தார். முதலில் வாரிசு படக்குழுவினர் தான் பொங்கல் வெளியீட்டை முதலில் முடிவு செய்தனர். ஜனவரி 12 என போஸ்டரும் வெளியிட்டனர்.

Advertisement

பட வேலைகள் தாமதமானதால் தீபாவளி, கிறிஸ்துமஸ் என இரு விடுமுறைகளிலும் வெளியிட முடியாமல் வேறு வழியின்றி பொங்கலுக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் ரீலீஸ் தேதியை அறிவிக்காமல் அவர்களுக்குள்ளே வைத்திருந்தார்கள். இரு படங்களும் ஒன்றாக வந்தால் ஸ்கிரீன் தட்டுபாடு ஏற்படும் என்பதால் அவர்களுது படத்திற்கு கூடுதல் ஸ்கிரீன்கள் ஒதுக்கி தருமாறு வாரிசு பட தயாரிப்பாளர், ரெட் ஜெயன்ட்டிடம் கேட்டார். இருப்பினும் தமிழகம் முழுவதும் அஜித்தின் படத்திற்கு தான் தற்போது வரை அதிக ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது.

இரு தயாரிப்பாளர்களும் முதல் நாள் கலெக்ஷனுக்காக தான் இவ்வளவு மல்லு கட்டுகிறார்கள். முதலில் 12 என ரீலீஸ் தேதியை அறிவித்த வாரிசு படக்குழு பின்னர் அதில் மாற்றம் நிகழும் எனத் தெரிவிக்க, மேலும் குழப்பம் கூடியது. துணிவு படத்தின் ரீலீஸ் தேதி வெளியான அன்று 12 மணிக்கு வாரிசு படத்தின் ரீலீஸ் தேதி கொண்ட போஸ்டர் வெளியானது. இரு படங்களும் ஜனவரி 11ஆம் தேதி மோதுகின்றனர்.

Advertisement

விஜய் – அஜித், இருவரின் ரசிகர்களும் உற்சாகக் கடலில் மிதக்கின்றனர். முதல் நாள் தியேட்டர்களில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் நேரடியாக சென்று தான் எடுக்க வேண்டும். அதன் விலைகள் ரசிகர் மன்றம் மூலம் வாங்குவலப்படுவதால் 1000, 2000 என இருக்கும். மற்ற டிக்கெட்டுகள் ஆன்லைனில் 7ஆம் தேதி முதல் ( அதிகபட்சம் 230 ரூபாய்க்கு ) ரிசர்வ் செய்துக் கொள்ளலாம். பிவிஆர், ஐயனாக்ஸ் போன்ற மல்டிப்லக்ஸ் தியேட்டர்களில் ஜனவரி 9 அல்லது 10 ஆம் தேதி தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேரளா, பெங்களூருவில் ஆன்லைன் விற்பனைகள் தொடங்கிவிட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top