Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமா"தளபதி 67 பட குழுவில் டிக் டாக் பிரபலம்"??!

“தளபதி 67 பட குழுவில் டிக் டாக் பிரபலம்”??!

தளபதி விஜய் அடுத்த நடிக்கவிருக்கும் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படப்பிடிப்பிற்கான நடிகர் நடிகைகள் அறிவிப்பு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

- Advertisement -

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்த நடிக்கவிருக்கும் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது படப்பிடிப்பானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இன்று இத்திரைப்படத்தில் நடிக்க இருக்கின்ற நட்சத்திரங்களை அதிகாரப்பூர்வமாக ரசிகர்களுக்குஅறிமுகப்படுத்தியது .

இந்தப் படத்தில் தளபதி விஜயுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் டைரக்டர் மிஷ்கின் கௌதம் மேனன், ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க்விருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

- Advertisement -

மாஸ்டர் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைந்திருக்கிறார்
தளபதி விஜய். இந்த திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சலில் தயாராகயிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தில் நடிக்க இருக்கும் பெரிய நட்சத்திர பட்டாளங்களை பார்க்கும் போது அந்த செய்திகளில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு புதிய அறிமுகமாக பிரபல டிக் டாக் மட்டும் இன்ஸ்டாகிராம் புகழ் அமலா சாஜியும் தளபதி 67 படத்தில் இணைய இருக்கிறார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று டெல்லி சென்றுள்ள இவர் தில்லி விமான நிலையத்தில்வைத்து ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் அதில் இது நடக்கப்போகிறது என்ற தலைப்புடன் அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில்பதிவேற்றிருக்கிறார். தற்போது தளபதி 67 பட குழுவும் படப்பிடிப்பு களுக்காக காஷ்மீர் சென்று இருப்பதால் அமலா சாஜியும் ஷூட்டிங்கிற்காக காஷ்மீருக்கு தான் செல்கிறார் என அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் படக்குழுவிடமிருந்து புதிய அப்டேட்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் அமலா ஷாஜி அந்தப் புகைப்படத்திற்கு தளபதி 67 சூட்டிங்கா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியை புகைப்படத்தோடு பின் செய்து வைத்திருக்கிறார். இதனால் தளபதி 67 பட குழுவில் இவரும் இணைய இருக்கிறாரா? என்று எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. அவருக்கு நெருங்கிய வட்டாரங்களை தொடர்பு கொண்டு விசாரித்ததில் அவர் வேறு வேலை விஷயமாக சென்றுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 3.6 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular