Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாஇனி நான் தான் நம்பர் 1.. ! மோகன்லாலின் 7 வருட வசூல் சாதனையை முறியடித்த...

இனி நான் தான் நம்பர் 1.. ! மோகன்லாலின் 7 வருட வசூல் சாதனையை முறியடித்த 2018 படம்.. !

கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமா அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. ஃபீல் குட், திரில்லர், காமெடி, கமர்ஷியல் என அனைத்து வகைகளிலும் கலக்கி வருகிறது. பல படங்களை உதாரணமாக கூறலாம். அதில் இரு மாதங்களுக்கு முன்னர் வந்த ரோமன்சாம் படமும் அடங்கும். தற்போது 2018 எனும் அடுத்த்ச் சிறந்த படைப்பு வெளியாகியுள்ளது.

- Advertisement -

டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், வினீத் ஶ்ரீநிவாசன், அசிப் அலி, அபர்ணா பாலமுரளி, கலையரசன், நரைன் மற்றும் பலர் நடிப்பில் ஆன்டனி ஜோஸப் இயக்கத்தில் உருவான திரைப்படம் 2018. இந்தப் படம் கேரளாவில் வந்த வெள்ளப்பெருக்கை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரில்லர் படம். மே 5ஆம் தேதி வெளியான இப்படம் 2 – 3 நாட்களில் நல்ல விமர்சனங்களைப் பெற்று சிறப்பாக ஓடத் துவங்கி இன்று வசூலில் சாதனைப் புரிந்துள்ளது.

மலையாளத்தில் 100 கோடி வசூல் என்பது மிக மிகச் சிறந்த படத்தால் மட்டுமே பெற இயலும். தல்லுமாலா, ரோமன்சாம் படங்கள் கூட அதை எட்டவில்லை. முதன் முதலில் 100 கோடி வசூல் பெற்ற மலையாளத் திரைப்படம் மோகன்லாலின் புலி முருகன் ஆகும். அச்சாதனை இன்று தகர்தப்பட்டுள்ளது.

- Advertisement -

2016ஆம் ஆண்டுக்குப் பின் 6 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததே ஒழிய ஒருப் படமும் புலி முருகனின் உயரத்தை தொடவில்லை. இந்த ஆண்டு வெளியான 2018 எனும் படம் 7 ஆண்டுச் சாதனையை வென்றுள்ளது. இந்த வாரம் வரை 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மலையாள வெற்றிக்குப் பிறகு தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகி மலையாளத்தின் சிறந்த படம் எனும் பெயரைப் பெற்றுள்ளது இந்தப் படம். மிகவும் பெருமைக்குள்ளாகியாது.

Most Popular