Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாவாரிசு, துணிவு 2வது நாள் வசூல் என்ன? யார் லீடிங்? முழு விவரம்

வாரிசு, துணிவு 2வது நாள் வசூல் என்ன? யார் லீடிங்? முழு விவரம்

- Advertisement -

தமிழக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வாரிசு, துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி திரைக்கு வந்தது. இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை முதல் நாள் வசூல் துணிவு திரைப்படம் 21 கோடியும் வாரிசு திரைப்படம் 20 புள்ளி 25 கோடியும் தமிழகத்தில் வசூல் செய்தது. எனினும் உலகம் முழுவதும் உள்ள வசூல் துணிவை பின்னுக்கு தள்ளி வாரிசு முதலிடம் பிடித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாள் வசூல் இரண்டு படங்களுக்குமே குறைந்துள்ளது. எனினும் வாரிசை விட துணிவு அதிக திரையரங்குகளில் முதல் நாள் ரிலீஸ்  செய்யப்பட்டது. இதனை அடுத்து இரண்டாவது நாள் துணிவு படத்திருக்கு காட்சிகள் குறைக்கப்பட்டு தற்போது சரி சமமாக இரண்டு படங்களும் திரையில் ஓடுகின்றன. இந்த நிலையில் இரண்டாம் நாள் வசூல் குறித்து ஆரம்ப கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இதில் முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் அளவில் பின்தங்கிய வாரிசு தற்போது ஒரு கோடி ரூபாய் அளவில் துணிவை  முந்தி இருக்கிறது. இரண்டாவது நாள் வசூல் தமிழகத்தில் வாரிசு திரைப்படம் 17 கோடி ரூபாயும் துணிவு திரைப்படம் 16 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  திருச்சி மாநகரத்தில் இரண்டு திரைப்படங்கள் வசூல் தற்போது வெளியாக இருக்கிறது.

- Advertisement -

இதில் முதல் நாள் 63 லட்சம் ரூபாய் வசூல் செய்த துணிவு திரைப்படம் இரண்டாவது நாள் அன்று 30 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்து இருக்கிறது. வாரிசு திரைப்படம் முதல் நாள் 35 லட்சம் ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது  26 லட்சம் ரூபாய் ஆக குறைந்துள்ளது. எனினும் இன்று இரவு காட்சிகளிலிருந்து இரண்டு படங்களின் வசூல் மீண்டும் அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளபெரிய பொங்கல் விடுமுறை வரும் செவ்வாய்க்கிழமை வரை இருப்பதால் இரண்டு படங்களும் வசூலில் வரும் நாட்கள் பெரிய உச்சத்தை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Most Popular