Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..வாரிசு படம் டிவியில் ஒளிபரப்பு.. எப்போது?

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..வாரிசு படம் டிவியில் ஒளிபரப்பு.. எப்போது?

- Advertisement -

2023 ஆம் ஆண்டில் அதிக வசூலை குவித்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை வாரிசு பெற்றுள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தானா, யோகி பாபு, சரத்குமார், பிரபு,சியாம் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களை இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். இது தமிழ்நாட்டில் அதிக வசூல் சாதனை குவித்தது.

இத்துடன் துணிவு திரைப்படமும் இணைந்து வந்ததால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. எனினும் இந்த பந்தயத்தில் வாரிசு வெற்றி பெற்றது. வாரிசு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவி 60 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. பொதுவாக விஜய் படம் என்றாலே தொலைக்காட்சியில் டிஆர்பி எகிறி விடும்.

- Advertisement -

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கு ரசிகர்கள் இருப்பதால் விஜய் படம் போட்டாலே அதனை தொலைக்காட்சியில் குடும்பமாக அமர்ந்து பார்ப்பார்கள். ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, சர்க்கார்,தெறி ,பிகில், பைரவா போன்ற விஜய்யின் பல்வேறு படங்கள் சன் டிவியில் டிஆர்பி சாதனைகளை படைத்து இருக்கிறது.

- Advertisement -

இதனால் சன் டிவி தொடர்ந்து விஜய் படங்களையே வாங்கி குவித்து வருகிறார்கள். தற்போது குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள வாரிசு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தை திரையிட சன் டிவி முடிவு செய்துள்ளது. இதற்கான விளம்பரம் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

டிஆர்பி பந்தயம் தற்போது தொலைக்காட்சி சேனல்களிடையே கடும் போட்டியாக நிலவுகிறது. இதனை வெற்றி பெறுவதற்காக வாரிசு படத்தை சன் டிவி களமிறக்கி உள்ளது. இதனால் துளிவு திரைப்படமும் அதே நாளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுமா என கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏனென்றால் திரையரங்கில் நடைபெற்ற பந்தயத்தில் வாரிசு வென்றது. இதேபோன்று ஓடிடியில் நிகழ்ந்த பந்தயத்தில் வாரிசு வெற்றிவாகை சூடியது. இதனை அடுத்து தொலைக்காட்சிகளில் டிஆர்பி நடைபெறும் சண்டையில் வாரிசு வெற்றி பெறுமா இல்லை துணிவு வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு மத்தியில் எழுந்துள்ளது.

Most Popular