Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாதமிழரசன் படம் மூலம் 17 ஆண்டுக்கு பிறகு கம்பேக் தரும் இயக்குனர்

தமிழரசன் படம் மூலம் 17 ஆண்டுக்கு பிறகு கம்பேக் தரும் இயக்குனர்

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வளர்ந்து வந்த விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு நான் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். ஆனால் இவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படமே இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இதைத்தொடர்ந்து நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சைத்தான், அண்ணாதுரை திமிரு புடிச்சவன் போன்ற பல படங்கள் நடித்திருந்தார். ஆனால் இது எதுவும் அந்த அளவிற்கு எதிர்பார்த்து வெற்றியை அடையவில்லை. சமீபத்தில் 2021 ஆம் ஆண்டு இவர் நடித்த கோடியில் ஒருவன் திரைப்படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

- Advertisement -

தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி தமிழரசன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 2005 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாஸ் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பாபு யோகேஸ்வரன் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த படத்திற்கு கூடுதல் வரவேற்பை சேர்க்கும் விதமாக இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் விஜய் ஆண்டனியின் மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சந்திரமுகி ,அருந்ததி போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து கலக்கிய சோனு சூட் இந்த திரைப்படத்தின் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

மேலும் மலையாளத் சினிமாக்களில் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி, மேலும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு சங்கீதா சாயா சிங் போன்ற நடிகைகளும் இந்த தமிழரசன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் உடைய டீசர் இன்று இணையதளங்களில் வெளியாக இருக்கிறது. தாஸ் திரைப்படத்தின் உடைய இயக்குனர் பாபு யோகேஸ்வரனின் இரண்டாவது திரைப்படமான இந்த தமிழரசன் திரைப்படத்தை ரசிகர்கள் பெரும் அளவில் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்த தமிழரசன் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு ஒரு வெற்றியை அடைந்தால் நிச்சியம் இயக்குனர் பாபு யோகேஸ்வரனுக்கு ஒரு நல்ல திறப்புமுனையாக அமையும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பதால் நிச்சயம் இந்த திரைப்படத்தின் பாடல்களும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular