இயக்குநர் எழில் இயக்கத்தில் வெளியான பெண்ணின் மனதை தொட்டு படமும் இன்றும் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த படத்தில் வரும் ”கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா” என்ற பாடலை கேட்டு உருவாக 90ஸ் கிட்ஸ்களே இருக்க முடியாது. பிரபு தேவாவின் விளையாட்டுத்தனத்தை முழுதாக வெளிப்படுத்திய திரைப்படம் தான் அது.
துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு பின் இயக்குநர் எழில் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் இது. வசூல் மற்றும் விம்ர்சன ரீதியாக பிரவுதேவாவுக்கு பெரிய இடத்தை கொடுத்தது. பிரபுதேவா, ஜெயசீலா, சரத் குமார், வையாபுரி, விவேஷ், தாமு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்த திரைப்படம் 2000ம் ஆண்டில் வெளியான முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாகும்.
செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என்று அனைத்தையும் கலந்துகட்டி அடித்திருப்பார் இயக்குநர் எழில். இந்த படம் குறித்து இயக்குநர் எழில் பேசும் போது, துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு பின் மீண்டும் விஜய் சாருடன் ஒரு படத்தில் இணையவதாக இருந்தது. அப்போது பெண்ணின் மனதை தொட்டு கதையை எழுதிவிட்டு விஜய் சாரிடம் கொண்டு சென்று கூறினேன்.
அந்த கதையை கேட்டவும் விஜய் சாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதிகம் விருப்பப்பட்டு நிச்சயம் செய்கிறேன் என்று கூறினார். ஆனால் கடைசி நேரத்தில் வேறு சில விஷயங்கள் காரணமாக விஜய் சாரால் அந்த படத்தை செய்ய முடியவில்லை. அந்த படம் மட்டுமல்லாமல் 2 படங்களில் விஜய் சாருடன் இணையவிருந்தேன். அதுவும் மிஸ்ஸாகிவிட்டது.
அதன்பின் தான் பிரபுதேவாவை வைத்து அந்த படத்தை இயக்கினேன். பிரபுதேவாவும் அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டனும் நல்ல நண்பர்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து தான் கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா பாடலை எடுத்தேன். அந்த பாடலுக்கு எந்த மாஸ்டரை வைத்து எடுக்கலாம் என்று கூறிய போது, பிரவுதேவா நீங்களே எடுங்கள் எழில் என்று கூறிவிட்டார்.
அதன்பின் மாண்டேஜ் சீனாக நான் கூறுவதை அப்படியே பிரபுதேவா பாடலுக்கான காட்சிகளாக மாற்றுவார். அவரிடமிருந்து தான் நான் மாண்டேஜ் காட்சிகளை எடுக்க கற்றுக் கொண்டேன். அதேபோல் ”நான் வறுத்தக்கறி” பாடலுக்கு ஒரு காட்சியில் மாடியில் இருந்து குதித்து குதித்து பிரபுதேவா செய்த மாற்றங்களை கண்டு வியந்துவிட்டேன். அந்த ஷாட் 6 டேக் சென்றும் கொஞ்சம் கூட எனர்ஜி குறையவே இல்லை என்று தெரிவித்தார்.