விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்திய சினிமாவே எதிர்பார்த்திருக்கும் இப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள், படத்தின் ப்ரோமோ வீடியோ என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
இதற்கு ஏற்றாற்போல லியோ படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் தான் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. எனவே மாஸ்டர் படத்தின் மூலம் விஜய்க்காக சில கமர்ஷியல் அம்சங்களை இணைந்திருந்த லோகேஷ் இப்படத்தை விக்ரம் படத்தை போல முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் உருவாக்கவுள்ளார். இதன் மூலம் விஜய் ரசிகர்கள் தங்கள் நாயகனை வித்யாசமான ஒரு கோணத்தில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
லியோ படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் இருப்பதாக பேசப்பட்டு வருகின்றன. அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன் , மிஸ்கின் , மன்சூர் அலி கான் என ஏகப்பட்ட நடிகர்கள் வில்லனாக நடிக்கிறார்கள். இதில் மிஸ்கின் மற்றும் கௌதம் மேனனின் பகுதி படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது பாலிவுட் புகழ் சஞ்சய் தத் லியோ படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அடுத்ததாக விரைவில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் படப்பிடிப்பில் இணையவுள்ளார். ஒவ்வொரு வில்லன்களாக வரவழைத்து படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்து வருகின்றார் லோகேஷ்.
சமீபத்தில் சஞ்சய் தத் லியோ படப்பிடிப்பில் இணைந்ததை வெளிப்படுத்த படக்குழு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் விஜய்யின் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் லோகேஷை புகழ்ந்து தள்ளிவிட்டனர். விஜய்யை இதுபோன்று புதிதாக காட்டியதற்கு லோகேஷிற்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். லுக்கை பார்த்தாலே படம் எவ்வளவு மாஸாக இருக்கும் என்பதை எங்களால் யூகிக்கமுடிகின்றது என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். ஒரு ஆக்ஷன் படத்திற்கு ஏற்றாற்போல விஜய்யின் லுக் இருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தவிர விஜய்க்கு லியோ படத்தில் மேலும் சில கெட்டப்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் லியோ படத்தில் பாலிவுட்டில் பிரபலமான நடிகரான சஞ்சய் தத் இணைந்தார்.இதைத்தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பாலிவுட் பிரபலம் லியோ படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதாவது பாலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் லியோ படத்தின் ஹிந்தி விநியோகஸ்த உரிமையை வாங்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
பாலிவுட் திரையுலகில் மிகவும் செல்வாக்கான கரண் ஜோஹர் லியோ படத்தின் ஹிந்தி ரைட்ஸை வாங்கியுள்ளது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் மூலம் மும்பையிலும் லியோ படத்திற்கு கூடுதல் திரையரங்கங்கள் கிடைத்து படத்தின் வசூல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பும் அமைந்துள்ளது. ஆனால் இதைப்பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.