Tuesday, April 16, 2024
- Advertisement -
Homeசினிமாஅட்லீயின் ஜவான் படத்தில் ஷாரூக் கானுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த தளபதி விஜய்.. !...

அட்லீயின் ஜவான் படத்தில் ஷாரூக் கானுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த தளபதி விஜய்.. ! யார் அந்த ரோலை இப்போ செய்கிறார் தெரியுமா.. ?

கமேர்ஷியல் வகையில் தன் குருநாதர் ஷங்கரைப் போலவே சிறப்பான திரைப்படங்கள் தருபவர் இயக்குனர் அட்லீ. கோலிவுட்டில் 4 வெற்றித் திரைப்படங்களை முடித்துவிட்டு நேராக பாலிவுட்டில் ஷாரூக் கனை இயக்கும் அளவிற்கு உயர்ந்தார். அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாரூக் கானுக்கு ஜோடியாக நயன்தாராவும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.

- Advertisement -

ஜவான் என தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் புரோமோ சென்ற ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வெளியானது. படத்தின் ஷூட்டிங் மும்பை மற்றும் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படக்குழு முடிவு செய்த தேதியில் திரைப்படம் வெளியாக வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது, ஏற்கனவே பலர் ஜவான் படம் தள்ளிப் போவது உறுதி என்கின்றனர்.

ஜவான் படத்தை ரிஜெக்ட் செய்த தளபதி விஜய்

ஜவான் திரைப்படத்தை அட்லீ அறிவித்த போதில் இருந்தே அதில் விஜய் கவுரவத் தோற்றம் அளிப்பதாக செய்திகள் பரவின. ஒரு கட்டத்தில் அனைவரும் அதை நம்பினர். காரணம் விஜய், ஷாரூக் கான், அட்லீ மூவரும் கருப்பு ஆடையில் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தனர். விஜய் அட்லீயின் நெருங்கிய நண்பர் என்பதால் இச்செய்தி உண்மையாக பல வாய்ப்புகள் இருப்பதாகவே தோன்றியது.

- Advertisement -

தற்போது கிடைத்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் விஜய்க்காக அட்லீ எழுதிய அந்த சிறப்புத் தோற்றக் கதாபாத்திரத்தை விஜய் ரிஜெக்ட் செய்துள்ளாராம். விஜய் வேண்டாம் எனத் தவிர்த்த கதாபாத்திரத்தை செய்யுமாறு அல்லு அர்ஜூனிடம் அடுத்ததாக சென்றார் அட்லீ. அவரும் அதை ரிஜெக்ட் செய்துவிட்டார்.

- Advertisement -

இறுதியாக சஞ்சய் தத் அக்கதாப்பாத்திரத்தை செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார். மும்பை ஸ்டுடியோவில் ஷாரூக் கான் – சஞ்சய் தத் ஆக்க்ஷன் காட்சிகள் 5 நாள் ஷூட்டிங்கில் முடிக்கப்படவுள்ளது. ஹரூக் கான் மற்றும் விஜய்யை ஒரே ஸ்க்ரீனில் பார்க்க ஏங்கிய விஜய் ரசிகர்களின் கனவு கனவாகவே போனது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் தீவிரமாக செய்ல்பட்டு வருவதால் இது போன்ற சிறிய கதாபாத்திரத்தில் அவர் கவனம் செலுத்தாதது ஆச்சர்யம் இல்லை. லோகேஷின் படத்திற்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீயுடன் மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது.

Most Popular