Monday, October 2, 2023
- Advertisement -
HomeEntertainmentஎதிர்பாராத ட்விஸ்ட்.. கடைசி விவசாயி இயக்குனருடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி… ஆனால் இந்த முறை...

எதிர்பாராத ட்விஸ்ட்.. கடைசி விவசாயி இயக்குனருடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி… ஆனால் இந்த முறை திரைப்படம் அல்ல, வெப் சீரிஸ்!

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். குறும்படங்கள் இயக்கிக்கொண்டிருந்த அவர் காக்கா முட்டை மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகி முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்தார். அதனையடுத்து அவர் விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை படத்தை இயக்கினார்.

இந்தப் படத்தி விஜய் சேதுபதியுடன் யோகிபாபுவும் நடித்திருந்தார். வறுமையின் காரணமாக வெளிநாடு செல்ல ஏங்கும் இளைஞர்களின் வாழ்வியலை பதிவு செய்திருந்தது இப்படம். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. குறும்பட காலத்திலேயே நண்பர்களாக இருந்த விஜய் சேதுபதியும், மணிகண்டனும் ஆண்டவன் கட்டளையின் மூலம் மேலும் நெருக்கமானார்கள்.

- Advertisement -

இதனையடுத்து மீண்டும் மணி இயக்கத்தில் விஜய் சேதுபதி கடைசி விவசாயி படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்து படத்தை தயாரிக்கவும் செய்தார். படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் மணிகண்டனை தூக்கி வைத்து கொண்டாடினர். மிஷ்கின் நேரடியாக மணிகண்டன் வீட்டுக்கு சென்று மாலை போட்டு கௌரவித்தார்..

இந்நிலையில், மணிகண்டனுடன் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். ஆனால் இம்முறை திரைப்படமாக இல்லாமல், வெப் சீரிஸ் ஒன்றிற்காக இருவரும் பணியாற்ற உள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில்
வெளியாக இருக்கும் இந்த வெப்சீரிஸின், பட பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

- Advertisement -

ராஜேஷ் முருகேசன் இசையமைக்கும் இந்த தொடருக்கு, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிகண்டன் விஜய் சேதுபதி ஜோடி, வெப் சீரிஸில் களம் இறங்குவது பலரையும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

Most Popular