Monday, December 4, 2023
- Advertisement -
HomeEntertainmentமாமதுரையில் நிறைவடையும் தங்கலான் படப்பிடிப்பு… விக்ரமுக்கு படத்தில் இரண்டு கெட்-அப்… பா ரஞ்சித்தின் அடுத்த பாய்சசல்

மாமதுரையில் நிறைவடையும் தங்கலான் படப்பிடிப்பு… விக்ரமுக்கு படத்தில் இரண்டு கெட்-அப்… பா ரஞ்சித்தின் அடுத்த பாய்சசல்

தங்கலான் படத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

பா ரஞ்சித்தின் தங்கலான்

நட்சத்திரம் நகர்கிறது படத்தில் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித், விக்ரமை வைத்து தங்கலான் எனும் படத்தை எடுத்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் நீலம் படத் தயாரிப்புக் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய 18ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.

தங்கலான் திரைப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கி வருகின்றனர். இப்படத்தில் மலையாள நடிகை பார்வதி, மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். ப்ரீயட் படமாக இப்படத்தின் படப்பிடிப்பு கேஜிஎஃப், கடப்பா, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

- Advertisement -

புது அவதாரம் எடுத்த விக்ரம்

தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். சமீபத்தில் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த மாதம் தங்கலான் படத்தின் ஷூட்டிங் ரிகர்சலின்போது விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டது.

- Advertisement -

இதனையடுத்து அவரது வீட்டில் ஓய்வில் இருந்த அவர் சமீபத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இந்தச் சூழலில் விக்ரம் முழுவதுமாக காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் எப்போது தங்கலான் ஷூட்டிங் தொடங்கும் என்ற கேள்வி எழுந்திருந்தது.

இரண்டு வேடங்களில் விக்ரம்

சமீபத்தில் நடந்த மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது பேசிய இரஞ்சித், தங்கலான் படப்பிடிப்பு ஜூன் 15ஆம் தேதி தொடங்கும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் படப்பிடிப்பு முடிவடைந்து இருப்பதாகவும், கடைசி கட்ட படப்பிடிப்பு மதுரையில் ஒரு வாரம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டங்களுக்கான காட்சிகள் படமாக்கப்படும் என்றும் இத்துடன் தங்கலான் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் புதிய அப்டேட் ஆக விக்ரம் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், இதில் ஒன்று முப்பது வயது இளைஞர் வேடம் என்றும், மற்றொரு இடம் முதியவர் கதாபாத்திரம் எனவும் கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் தங்கலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் படத்தை பா.இரஞ்சித் முடித்துவிட்டு மெகா ஹிட்டடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்திருக்கிறது.

Most Popular