Entertainment

‘சாவு எங்கள குறிப் பாத்திருக்குறது தெரியாம கபடி விளையாட்டி இருந்தோம்”..துப்பாக்கி சத்தம், சண்டையென கவனம் ஈர்க்கும் இராவண கோட்டம் டிரைலர்!

மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படத்தில், கதாநாயகனாக நடிகர் கதிர் நடித்திருந்தார். நாயகியாக நடிகை ஓவியா நடித்திருந்தார். மேலும் கலையரசன், விஜி சந்திரசேகர், வேல ராம மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

2013 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்தது. பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இந்த படத்துக்குப் பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வந்த படம் ‘இராவண கோட்டம்’. கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றது.

Advertisement

சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

‘இராவண கோட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் முதல் பாடலான ‘அத்தனபேர் மத்தியில’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்ப்பை பெற்றது. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்குப்பின் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிலம்பரசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

ஒப்பாரி பாடலுடன் படத்தின் ட்ரெய்லர் தொடங்குகிறது. ‘சாவு எங்கள குறிப் பாத்திருக்குறது தெரியாம கபடி விளையாட்டி இருந்தோம்’ வசனத்துடன் தொடங்கும் காட்சிக்குப் பின்னர் காதல் ஆசுவாசப்படுத்துகிறது. தொடர்ந்து வரும் ‘இரண்டு சாதிக்கு நடந்த கலவரம்’ என்ற டயலாக் படம் தென்மாவட்டங்களின் சாதிய பிரச்சினையை கையிலெடுத்திருப்பதை உணர்த்துகிறது. அடுத்தடுத்து துப்பாக்கிச் சத்தம், சண்டை, ரத்தம் என நீளும் சண்டைக் காட்சிகள் என மொத்த ட்ரெய்லரில் பெரிய அளவில் புதுமை தென்படவில்லை. படத்தின் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top