தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஹிட் படங்களாக கொடுத்த வந்த நடிகர் விஷால் தற்போது அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான எனிமி மற்றும் வீரமே வாகை சூடும் திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தை நடித்திருக்கிறார்.இது ஐந்து மொழிகளில் ரிலீசாக உள்ளது.
இந்த படத்தின் டீசரும் மக்களை கவரும் வகையில் இருக்கிறது. நடிகர் விஷால் இந்த படத்தில் கான்ஸ்டபிள் ஆக வருகிறார். இந்த படத்தில் டிரைலர் விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நட்சத்திரங்களும் படம் சூப்பர் ஹிட் ஆகும் என நம்பிக்கை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் விஷால் தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். 90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத கேரக்டரான பாட்ஷா படத்தில் ரகுவரன் ஏற்று நடித்த மார்க் ஆண்டனி என்பதுதான் இந்த படத்தின் தலைப்பு.
இந்த நிலையில் படத்தின் முதல் செடியூல் முடிந்துவிட்டது. மார்க் ஆண்டனி படம் தொடர்பாக சில தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. இதில் நடிகர் விஷால் முதல் முறையாக மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.தந்தை மற்றும் இரண்டு மகன்களாக விஷாலே நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. படத்தின் 15 நாள் படப்பிடிப்பு காட்சிகளை தயாரிப்பாளர் வினோத் கண்டு பிரமித்து போய்விட்டதாகவும் , இதனால் படம் மீது தனி நம்பிக்கை வந்து விட்டதாகவும் தயாரிப்பாளர் வினோத் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அழைத்து பாராட்டியதாக திரைப்பட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் விஷாலுடன் முதல் முறையாக எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்துள்ளார். சமீப காலமாக எஸ்.ஜே சூர்யா முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்கிறார்.அவர் நடிக்கும் திரைப்படங்களும் செம ஹிட் ஆகிறது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு வில்லன் ஆகவும் மிரட்டும் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்து போய் இதில் நடிக்க ஒப்புக் கொண்டதாக எஸ்.ஜே சூர்யா கூறியிருக்கிறார்.
மார்க் ஆண்டனி திரைப்படம் இரண்டு காலகட்டத்தில் நடப்பது போல் படமாக்கப்படுகிறது. இதில் ஒரு காலகட்டம் 1975 இல் நடப்பது போலவும், இன்னொரு காலகட்டம் 1995 இல் நடப்பது போலவும் படமாக்கப்படுகிறது. இந்த படத்தில் கிராபிக்ஸ் ,வி எஃப் எக்ஸ் காட்சிகளை குறைவாக காண்பித்து உண்மையான செட்டுகளை வைத்து படம் தயாரிக்க இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு எடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் ஏற்கனவே மூன்று பாடல்களை ஒரு தீம் மியூசிக் இசையமைத்து படக்குழுவிடும் அளித்துள்ளார்.
