சினிமா

” தயவு செய்து தளபதி 67 அப்டேட் மட்டும் கேட்காதீங்க பிளீஸ் ” ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த லோகேஷ் கனகராஜ் – வீடியோ இணைப்பு

Lokesh Kanagaraj Thalapathy 67 update

தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் குறைந்த காலத்தில் தன் திறமையால் மிகப் பெரிய ரசிகர் பட்டாளதை திரட்டியவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிகளுக்கு மேல் அள்ளி விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைக் கண்டது.

எந்த ஒரு இயக்குனரிடம் உதவியாளராக பணி புரியாமல் தன் சொந்த உழைப்பினால் இவர் முன்னேறியது பல இளம் இயக்குனர்களுக்கு ஓர் இன்ஸ்பிரேசன். மாநகரம், கைதி படங்களுக்குப் பின் தன் மூன்றாவது படத்திலேயே கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவான விஜய்யை இயக்குவது எளிதான விஷயம் அல்ல. 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு விஜய் – லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படம் வெளியானது.

எப்போதும் போல் இல்லாமல் இந்தப் படத்தில் நடிகர் விஜய் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்தார். முதல் பாதியில் விஜய் மதுப் பிரியராக நடித்த ஜேடி கேரக்டர் அனைத்து வித ரசிகர்களும் கொண்டாடிய ஒன்று. இந்த படம் முடிவடைந்த பின்பு லோகேஷ் கனகராஜ் தன் குருநாதர் கமல் ஹாசனுடன் விக்ரம் திரைப்படத்தை உருவாக்க சென்றுவிட்டார். நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும் ரசிகர்கள் மீண்டும் விஜய் – லோகேஷ் கனகராஜ் ஜோடியில் ஓர் படத்தைக் காண ஏங்கினர்.

கைதி படத்தை விக்ரம் திரைப்படத்துடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் தனக்கென ஓர் யுனிவர்ஸை உருவாக்கியுள்ளார். இது ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யுடன் கைகோர்க்க உள்ளதாக செய்திகள் கசிந்தன. கிட்டத்தட்ட இந்த செய்தி 90% உறுதியாகிவிட்டது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான் வரவில்லை.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செல்லும் இடமெல்லாம் விஜய் ரசிகர்கள் தளபதி 67 படம் குறித்து கேட்டு வருகிறார்கள். மீடியாவும் அவரிடம் இருந்து செய்தியைக் கறக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் லோகேஷ் அவர்கள் விடாப்பிடியாக படக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வரும் என பதிலளித்து விட்டு நகர்ந்துவிடுகிறார்.

நியூஸ் 7 தமிழ் ஹெல்த் எனும் புதிய யூடியூப் சேனலின் திறப்பு விழாவில் லோகேஷ் பங்கேற்றார். மேடையில் பேசிக் கொண்டிருந்த லோகேஷ் அங்கிருந்த மக்களின் கேள்விகளுக்கு பதிலப்பதாக கூறினார். கேள்விகளுக்கு முன்பு “ தளபதி 67 அப்டேட் சீக்கிரம் வந்துடும். தயவு செய்து அத பத்தி மட்டும் கேட்காதீங்க. ” என கோரிக்கையை முன்வைத்துவிட்டார்.

நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பட வேலைகளுக்காக அவர் இதைச் செய்திருக்கலாம். நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதன் பணிகளை செப்டம்பர் மாதம் அவர் முடித்துவிடுவார். செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் விஜய் – லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top