Thursday, March 28, 2024
- Advertisement -
Homeசினிமா“ என்னங்க சீரியல் படம்னு கிண்டலு ? அவ்வளவு தான் மரியாதை ” -‌ செம...

“ என்னங்க சீரியல் படம்னு கிண்டலு ? அவ்வளவு தான் மரியாதை ” -‌ செம கடுப்பில் வார்தைகளைக் கொட்டிய வாரிசு இயக்குனர் வம்சி… !

தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் திருநாளையொட்டி தனது போட்டியாளரான அஜித்துடன் மோதினார். ரசிகர்களுக்கு 2 படங்களும் விருந்தாக அமைந்தது. தெலுங்கு இயக்குனர் வம்சி பைட்டிபள்ளியுடன் இணைந்து வாரிசு எனும் இருமொழி ( தமிழ் & தெலுங்கு ) படத்தில் நடித்தார். படம் துவங்கும் முன்பே இது முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட் படமாக உருவாக்கப்படுகிறது என தெரிவித்துவிட்டனர்.

- Advertisement -

இளைய தளபதியை வைத்து இயக்கினாலே இப்போதெல்லாம் மினிமம் கியாரண்டி தான். வாரிசு படம் ஏற்கனவே 150 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டது, இன்னுமும் செய்யவுள்ளது. இது தவிர சேட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல் ரைட்டஸ் என கொள்ள லாபம் பார்துவிட்டார்கள். இருப்பினும் விமர்சன ரீதியாக படம் சற்று மோசமான வார்த்தைகளையே பெற்றது. துணிவு படத்தைக் காட்டிலும் குறைவான கவனத்தை ஈர்த்துள்ளது.

படம் எதிர்பார்த்தவாறு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கதை அவ்வளவு அழுத்தமாக இல்லை என்பது தான் உண்மை. படத்தை இணையத்தில் மெகா சீரியல் என காலாய்துக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட இயக்குனர் வம்சி நேர்காணல் ஒன்றில் பொறுமையை இழந்து ஆத்திரத்தில் கோபத்தைக் காட்டினார்.

- Advertisement -

அவர், “ ஒரு படத்தை உருவாக்க எத்தனை கலைஞர்கள் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய நடிகர்களுள் ஒருவரான விஜய் எவ்வளவு தியாகம் செய்து கஷ்டப்பட்டுள்ளார்கள் தெரியுமா ? சுலபமாக கேலி செய்கிறார்கள் சீரியல் என்று, என்ன நியாயம் இது ? முதலில் ஏன் சீரியலை தரக்குறைவாக பேசுகிறீர்கள், அதுவும் ஒரு கிரியேட்டிவ் துறை தான். போய் பாருங்கள் உங்கள் வீட்டில் அம்மா, சித்தப்பா என எத்தனை உறவுகள் அந்த சீரியலை ரசித்து பார்க்கிறார்கள் என. படத்தை விமர்சனம் செய்ய வேண்டாம் என சொல்லவில்லை, நல்ல கூர்ந்து பகுப்பாய்வு செய்து விமர்சனம் செய்யுங்கள் எனக் கேட்கிறேன். ” என்றார்.

- Advertisement -

மேலும், “ எந்த ஒரு வேலையையும் குறைவாக கேலி செய்யாதீர்கள். அப்படி செய்தால் அப்பேச்சு உங்களையும் சேர்த்து அழிக்கும். கிண்டல் செய்பவர்களின் பேச்சை நான் காதில் போட்டுகொண்டு வருந்தினால் அது நான் என் தொழிலையே கேவலப்படுத்துவது போல் ஆகிவிடும், நான் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டேன். நான் ஒன்றும் இந்தியாவின் சிறந்த படத்தை இயக்குகிறேன் எனச் சொல்லி இப்படி செய்யவில்லை. என்னுடைய சாப்ட்வேர் வேலையை எல்லாம் விட்டுவிட்டு இத்துறைக்கு வந்து கமர்ஷியல் சினிமா மூலம் பார்வையாளர்களை ரசிக்க வைக்க வேண்டுமென மட்டுமே எண்ணி வாரிசை உருவாக்கினேன், அதை தியேட்டர்களில் ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ”

Most Popular