தமிழ் திரையுலகில் ஒரு படத்தை மற்ற படங்களோடு இணைத்து முதல் முறையாக சினிமாட்டிக் யூனிவர்ஸ் உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ். 2019ஆம் ஆண்டு சத்தமின்றி கைதி படத்தை உருவாக்கி விஜய்யின் பிகில் படத்துடன் மோதவிட்டார். விமர்சன ரீதியாக பிகில் படத்தை விட அதிக வரவேற்பை பெற்றது கைதி தான். சுமார் 100 கோடிக்கு மேல் லாபமும் கிடைத்தது.
சமீபத்தில் தன் ஆசான் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை உருவாக்கிய லோகேஷ் அப்படத்தின் இடையே மற்றும் கிளைமேக்ஸில் கைதி பட காட்சிகளையும் அதில் நடித்தவர்களை விக்ரம் படத்தில் இணைத்தும் காட்டினார். அதை லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என மக்கள் அழைத்தனர். விக்ரம் படத்தின் முடிவில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சூர்யா கவுரவ தோற்றம் அளித்து திரையரங்கை அதிற வைத்தார். அவரின் 10 நிமிட காட்சி அடுத்த பாகத்தின் மேல் இருக்கும் ஆவலை தூண்டியது.
தற்போது லோகேஷ் கனகராஜ் தன் அடுத்த பட வேலைகளை துவங்கியுள்ளார். இரண்டாவது முறை தளபதி விஜய்யுடன் அவர் இணைவது உறுதியாகிவிட்டது ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் இன்னும் வெளிவரவில்லை. இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றனர். மும்பையை மையமாக கொண்ட கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என செய்திகள் பரவி வருகின்றன.
விருமன் படத்தின் புரொமோஷன் வேலையில் ஈடுபட்டுள்ள கார்த்தி கேரளாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் தளபதி 67 படத்தை இயக்கப்போவது லோகேஷ் கனகராஜ் தான் என மேடையில் கூறிவிட்டார். இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் பரவசத்தில் மிதக்கின்றனர். மேலும் அடுத்த ஆண்டு கைதி 2 படத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் கார்த்தி.
#EXCLUSIVE: After @Dir_Lokesh finish @actorvijay sir film , kaithi 2 will happen – @Karthi_Offl #Thalapathy67🔥 pic.twitter.com/wgNAHlUt3m
— #Thalapathy67 (@Vijay67FiIm) August 9, 2022
ஏற்கனவே வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் எப்போதும் இல்லாமல் வித்தியாசமான விஜய்யை திரையில் கண்டு ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இம்முறை அதை விட சிறப்பான ஒன்றை லோகேஷ் கனகராஜிடம் எதிர்பார்க்கின்றனர். லோகேஷ் இயக்கவிருக்கும் இந்த படம் அவரது சினிமாட்டிக் யூனிவர்ஸில் ஒன்றாக இருக்க வேண்டுமென்பதே ரசிகர்களின் ஏக்கம். இந்த படம் அதில் இடம்பெறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.