Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய்யைப் போல ரசிகர்களுக்கு தன் கையால் பிரியாணி விருந்து அளித்த சிம்பு - வீடியோ இணைப்பு.....

விஜய்யைப் போல ரசிகர்களுக்கு தன் கையால் பிரியாணி விருந்து அளித்த சிம்பு – வீடியோ இணைப்பு.. !

உடல் எடை ஏறியப் பின் அவ்வளவு தான் அவர் சினிமா கேரியர் முடிந்தது என பலர் கேலி செய்தபோது மிகவும் அமைதியாக இருந்து தீவிரமாக கஷ்டப்பட்டு யாரும் எதிர்பார்க்காத கம்பேக் கொடுத்தார் சிலம்பரசன். இதன் மூலம் இன்று பலரது ரோல் மாடலாக இவர் திகழ்கிறார்.

- Advertisement -

சினிமாவில் இனி தொடர்ந்து நடிப்பதாக உறுதியளித்தார் சிம்பு. பல்வேறு சிக்கல்களுக்குப் பின் வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் மூலம் கோலிவுட்டின் தலைசிறந்த கம்பேக்களின் பட்டியலில் சிம்புவின் பெயர் பொறிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து ஹிட்டான படங்கள்.

அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. நடிகர் சிலம்பரசனின் பெரிய மாற்றதிர்க்குப் பின் அவர் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் காணலாம். தற்போது அவரது பேச்சுகளும் எந்த வித சர்ச்சைகளும் இல்லாத ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

அண்மையில் பத்து தல இசை வெளியீட்டு விழாவில் கூட ரசிகர்களுக்காக மேடையில் நடனம் ஆடி தன் விண்டேஜ் வைப்ஸை காட்டினார். முற்றிலும் மாறிய சிம்புவை நாம் தற்போது காண்கிறோம். பத்து தல படத்தின் வெற்றியதித் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்தார் சிலம்பரசன்.

- Advertisement -

ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். சிம்பு பேசியதாவது, “ நம்முடைய மன்றத்தின் வேலைகளை விரிவுப்படுத்தி மக்களுக்கு நிறைய சமூக பணிகள் செய்யுங்கள் அவர்களது மதிப்பைப் பெறுங்கள். எதிர்காலத்தில் உதவும். திரைப்பட ரீலீஸின் போது பாதுகாப்பாக பணி செய்யுங்கள். ” என்றார் சிலம்பரசன்.

அனைத்து பேச்சுகளும் ஃபோட்டோ ஷூட்களும் நிறைவுப் பெற்றப் பின் ரசிகர்களுக்கு தன் கையால் பிரியாணி பரிமாறினார் சிம்பு. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யைப் போலவே சிம்புவும் தன் ரசிகர்களுக்கு பிரியாணி ட்ரீட் வழங்கியுள்ளார்.

Most Popular