Friday, December 6, 2024
- Advertisement -
Homeசினிமாமஞ்சு வாரியர் துணிவு படத்தில் மகளா? காதலியா? - அஜித் ரசிகர்களிடையே மோதல்

மஞ்சு வாரியர் துணிவு படத்தில் மகளா? காதலியா? – அஜித் ரசிகர்களிடையே மோதல்

- Advertisement -

துணிவு திரைப்படம் அஜித் திரைப்பட வாழ்க்கையில் வெளிநாடுகளில் அதிக வசூலை ஈட்டிய பெருமையை பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் மட்டும் 120 கோடி ரூபாய் வசூல் சாதனையை செய்திருக்கிறது. உலக அளவில் 60 கோடி ரூபாய் சாதனை செய்துள்ள துணிவு திரைப்படம் மொத்தமாக 190 கோடி ரூபாய் என்ற மைல் கல்லை எட்டிருக்கிறது. வங்கிக் கொள்ளை, வங்கியில் நடைபெறும் ஊழல் என அனைத்தையும் மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படம் வந்து 26 நாட்கள் கழித்து தற்போது அஜித் ரசிகர்களுக்குள்ளே ஒரு குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.அதாவது துணிவு படத்தில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் வரும் மஞ்சு வாரியர் அஜித்துக்கு மகளா இல்லை காதலியா என்ற குழப்பம் தான் அது. இதற்கெல்லாம் காரணம் படத்தில் வந்த ஒரே ஒரு வரி தான். கிளைமாக்ஸ் என்பது அஜித் மஞ்சுவாரியரை கட்டியணைக்கும் போது பெத்த மகளை காக்கும் தந்தை ஒரு கேங்ஸ்டர் என்ற வரி வருகிறது.

- Advertisement -

இது தவறான இடத்தில் வருவதாக அஜித் ரசிகர்கள் விமர்சித்தனர். இதற்கு மற்றொரு அஜித் ரசிகர் மஞ்சு வாரியர் படத்தில் அஜித்துக்கு மகளாக தான் வருவதாகவும் இயக்குனர் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது பூதாகரமாக மாறி சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களின் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அது அஜித்தின் மகள்தான் என்று ஒரு தரப்பினரும் இல்லை அது அஜித்தின் காதலி என்று மற்றொரு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் மஞ்சு வாரியர் மகளாக இருக்க வாய்ப்பே இல்லை என்பது தான் நிதர்சனம். ஆனால் சில அஜித் ரசிகர்கள் மஞ்சு வாரியர் குண்டு அடிப்படும் போது காயத்தால் அப்பா என்று கற்றுவதை தவறாக புரிந்து கொண்டு அஜித்தின் மகள் தான் மஞ்சுவாரியர் என்று கூறி வருகின்றனர். இது அஜித்தை கிண்டல் செய்யும் விதமாக இருப்பதாக மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதால் அவர்களுக்குள்ளே மோதல் ஏற்பட்டு இருக்கிறது .

Most Popular