சினிமா

முக்கியமான காட்சியையே எடுக்காமல் படத்தை ரிலீஸ் செய்த இயக்குனர்

பரபரப்பான இந்த உலகம் கொரோனாவால் முடங்கி கிடந்தது. இந்த நிலையில் கொரோனாவால் எத்தனையோ பேருக்கு அவர்களுடைய கனவுகள் கடமைகள் என்று பலவை நிறைவேறாமல் போனது. ஆனால் சிலருக்கு இந்த கொரோனா காலம் பல நன்மைகளையும் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கொரோனா காலத்தில் எத்தனையோ துறைகளில் வேலை முடங்கப்பட்டாலும் சினிமா துறையை கொரோனா ஒரு பெரிய முடக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஏனெனில் கொரோனா காலத்தில் எத்தனையோ படங்கள் உருவாக்கப்பட்டு ஓ டி டி களில் வெளியாக்கப்பட்டது.
ஊரடங்குகளால் திரையரங்குகள் தான் மூடப்பட்டது. சூரரைப் போற்று ,ஜெய் பீம் போன்ற படங்கள் ஓ டி டி ல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் ஒரு புதுமுக டைரக்டரும் உருவாகி இருக்கிறார். ஆசை, நேருக்கு நேர் ,சத்தம் போடாதே போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வசந்துக்கு பல படங்களில் துணை இயக்குனராக இருந்தவர் கே வெற்றிச்செல்வன். இவர் ராஜா ராணி, சென்னை 600028 என்ற திரைப்படங்களில் மூலம் ரசிகர்களை ஈர்த்த நடிகர் ஜெய்யின் நடிப்பில் எண்ணி துணிக என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டது.ஆனால் சில காரணங்களால் இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு தாமதமானது.

இதில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்திருந்தார்.மேலும் இவர்களோடு அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணன், சுனில் ரெடி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு கைதி ,அடங்கமறு, விக்ரம் வேதா போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷ்யாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.எண்ணி துணிக திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அண்மையில் ஒரு நேர்காணலில் எண்ணித் துணிக திரைப்படத்தின் இயக்குனரான கே எஸ் வெற்றிச்செல்வன் இந்தப் படத்தை பற்றிய சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

Advertisement

அதில் இந்தப் படம் ஒரு ஒரு த்ரில்லர் திரைப்படம் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்த படத்தில் ஆபாசமோ ஆக்ஷனும் இல்லாததால் இது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியிருந்தார். இந்தப் படத்தில் அதுல்யாவிற்கும் ஜெயிக்கும் இடையில் காதல் பிளாஷ் பேக்குகள் எடுப்பதாக இருந்தது. ஆனால் இந்த கொரோனாவால் அந்த காட்சிகள் எடுக்கப்படாமல் போகிவிட்டது என்று கூறியிருந்தார். எண்ணித் துணிக திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜெயிக்கும் அதல்யாவிற்கும் ஆன காதல் பிளாஷ்பாக்குகளையும் எடுத்திருந்தால் படம் இன்னும் ஹிட் ஆகி இருக்கும் என்று இயக்குனர் கே எஸ் வெற்றிச்செல்வன் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா காலத்தில் எத்தனையோ திரைப்படங்கள் உருவாக்கப்பட்டாலும் அவற்றில் அவர்கள் சோசியல் டிஸ்டன்ஸை மெயின்டைன் செய்திருக்கிறார்கள். அதனால் கூட கே எஸ் வெற்றிச்செல்வன் குறிப்பிடுவது போன்று எண்ணித் துணிக திரைப்படத்தின் காதல் காட்சிகளை ஃப்ளாஷ் பேக்கில் எடுக்க முடியாமல் போகி இருக்கலாம்.

• திரைப்படங்களைப் பொறுத்தவரை திரில்லர் ஆக்சன் சென்டிமென்ட் காமெடி போன்ற காட்சிகள் இடம்பெற்றாலும் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்படுவது காதல் காட்சிகளே அப்படிப்பட்ட காட்சியை தான் இயக்கிய எண்ணித் துணிக திரைப்படத்தில் எடுக்க முடியாமல் போகிவிட்டது என்று ஆதங்கத்தோடு கூறியிருந்தார் இயக்குனர் கே எஸ் வெற்றி செல்வன் அப்படி எடுத்திருந்தால் எண்ணித் துணிக திரைப்படம் ரசிகர்கள் இடையே இன்னும் கூடுதல் வரவேற்பை என்று வரவேற்பை பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top