Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇவனை இலங்கைக்கு தூக்கிட்டு போயிடுவேன் நடிகை ஜனனியின் பேட்டியால் குஷியான ரசிகர்கள்

இவனை இலங்கைக்கு தூக்கிட்டு போயிடுவேன் நடிகை ஜனனியின் பேட்டியால் குஷியான ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் ஜனனி. இலங்கையை தாய் நாடாக கொண்டவர் நடிகை ஜனனி. இவர் பிக் பாஸில் இருக்கும் பொழுது இவருக்கு நிறைய ஹட்டர் இவருடைய குணத்திற்கு இருந்தாலும் இவருடைய அளவிற்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள்.

- Advertisement -

இவர் பிக் பாஸில் இருக்கும் பொழுது பிரபல சின்னத்திரை நடிகை ரட்சிதாவை பார்த்து எருமை மாடுக்கு சேலை கட்டியது போல் இருக்கின்றது என்று  சக போட்டியாளர் தனலட்சுமி இடம் கூறியது நடிகை ஜனனியின் பெயரை கெடுத்தது. பல பிரபலங்கள் எவ்வாறு இப்படி ஒரு நடிகையை பார்த்து கூறலாம் என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள் . இதை மீறி அவரை வரவேற்ற ரசிகர்களும் நடிகை ஜனனிக்கு இருந்தார்கள் .

இதன் காரணத்தினால் கடந்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்திலிருந்து முக்கிய கதாபாத்திரமாக நடிகை ஜனனி நடித்திருந்தார் .முதல் திரைப்படத்திலேயே இவருக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கிடைத்தது அவருடைய அதிர்ஷ்டம் என்றே கூறலாம். தளபதி விஜய் படத்தில் எத்தனையோ பேர் நடிப்பதற்கு வரிசை கட்டி நிற்கும் பொழுது ஜனனிக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததை ரசிகர்கள் பெருமளவில் வரவேர்த்தார்கள்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ஜனனி ஒரு வீடியோவில் தனக்கு வரக்கூடிய கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அழகான நடிகைகள் இதுபோன்று கூறுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது .அதனால் அதை கொண்டாடி வருகிறார்கள் .

- Advertisement -

அந்த வகையில் தற்பொழுது நடிகை ஜனனி தனக்கு கணவராக வரப்போற அவருக்கு அழகெல்லாம் முக்கியமில்லை. ஒரு பெண்ணுக்கு உண்மையாக இருந்தால் போதும் கணவனும் ,காதலனும் அதுபோல் இருந்தால் என் ஊரான இலங்கைக்கு தூக்கிச் சென்று விடுவேன் என்று நகைச்சுவை பானியல் அவர் கூறியது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Most Popular