Friday, July 26, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாமாபெரும் ஹிட்டான மஞ்சுமேல் பாய்ஸ், ஆவேசம் திரைப்படம் இன்னும் இரு தினங்களில் ஓடிடியில்.. எங்கு எப்போது...

மாபெரும் ஹிட்டான மஞ்சுமேல் பாய்ஸ், ஆவேசம் திரைப்படம் இன்னும் இரு தினங்களில் ஓடிடியில்.. எங்கு எப்போது ரீலீஸ் அறிவிப்பு.. !

மே மாதம் புதிதாக வெளியாகும் படங்களுக்கு இணையாக ஓடிடியிலும் சிறப்பான படங்கள் வரவிருகின்றன. மலையாளம், ஹிந்தி, தமிழ் என அனைத்து மொழிகளிலும் குறைந்தது ஒரு படமாவாது இந்த வாரம் வருகிறது. இப்பட்டியலில் இரண்டு பிரம்மாண்ட ஹிட் படங்கள் இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

பல வாரங்களாக மக்கள் எதிர்பார்த்த மலையாளப் படமான மஞ்சுமேல் பாய்ஸ் இந்த வாரம் ஓடிடியில் களமிறங்குகிறது. பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான இப்படம் சிறப்பான வருகையப் பெற்றது. விரைவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது.

தமிழில் இந்த ஆண்டு இதுவரை சிறப்பான படங்கள் வராததால், மலையாளப் படங்கள் அவ்விடத்தை பிடித்தது. சிறிய ஊர்களில் கூட ஹவுஸ்புல் ஷோக்களைப் பெற்று 100 கோடிகள் மேல் வசூல் சாதனையைப் படைத்தது இப்படம். மே 5ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது.

- Advertisement -

ஆட்டம், மஞ்சுமேல் பாய்ஸ், ப்ரம்மயுகம், பிரேமலு ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கோட் லைஃப் மற்றும் ஆவேசம் ஆகிய இரு படங்கள் மலையாளத்தில் வசூல் சாதனை படைத்தது. இதில் பகத் பாசில் மற்றும் மூன்று காலேஜ் மாணவர்கள் காம்போவில் மிகவும் கலகலப்பாக உருவான ஆவேசம் திரைப்படம் மிகவும் இன்னும் திரையரங்கில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

பகத் பாசிலின் மிரட்டலான நடிப்பில் மக்களின் அமோகமான வரவேற்பைப் அண்மையில் தான் வெற்றிகரமாக 25வது நாளைக் கடந்தது. ஆனால் இந்தப் படம் விரைவில் ஓடிடிக்கு வருவது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. வருகிற மே 9ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் மலையாள மொழியில் வருகிறது. இப்படத்துக்கு டப்பிங் இல்லை, வெளியானது ஒரே ஒரு மொழியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான டியர் படம் ஏப்ரல் 28ஆம் தேதியே நெட்பிளிக்ஸில் வந்துவிட்டது. குட் நைட் படத்தைப் போலவே இது அமைந்ததால் திரையரங்கில் பெரிதாக வரவேற்பு இல்லை. சந்தோஷ் ஜெயகுமார், ஷாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்த ‘ தி பாய்ஸ் ’ படம் ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளது.

அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் நடித்த ஷைத்தான் எனும் படம் ஹிந்தி, தமிழ் என 5 மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் மே 4 அன்று வருகிறது. ஹிந்தியில் வெளியான மற்றொரு மென்மையான சிறப்பான படமான ‘ லாப்பட்டா லேடீஸ் ’ கடந்த வாரம் வெளியாகிவிட்டது.

Most Popular