Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாமுதலில் நான் விஜய் ரசிகன்..அப்புறம் தான் நடிகன்! அவரால் தான் பாசிட்டீவ் வைப் இருக்கு-விசால்

முதலில் நான் விஜய் ரசிகன்..அப்புறம் தான் நடிகன்! அவரால் தான் பாசிட்டீவ் வைப் இருக்கு-விசால்

நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி பட விழாவில் நடிகர் விஜய் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார்.இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் பல கருத்துக்கள் குறித்து விஷால் நிகழ்ச்சி ஒன்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதில் சக நடிகர் என்பதற்கு முன் தான் தளபதி விஜயின் மிகப்பெரிய ரசிகர் என்றும் கூறி  மனமகிழ்ந்தார்! அவர் ஏற்கனவே லியோவில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை இழந்ததையும், தான் இயக்குனராக விஜய் வைத்து படம் இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என்றும் கூறியிருந்தது நினைவு கூற தக்கது.

இப்படத்தின் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் பற்றி குறிப்பிட்ட விஷால் ;ஜீவி தனது சிறப்பான இசையை கிராமம் வரை பாடல்களை சென்றடைய வைத்ததன் மூலம் தன்னை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார் என்று கூறினார்.‌

- Advertisement -


தளபதி விஜய் அரசியலுக்கு வந்து விட்டார்! நீங்கள் எப்போது வருவீர்கள்? என்ற கேள்விக்கு விஜய் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்றும், தான் ஏற்கனவே அரசியலில்  தான் இருப்பதாகவும் தெரிவித்தார்!

- Advertisement -

சமுதாயத்திற்கு நல்லது செய்யும் யாராக இருந்தாலும் அவர் அரசியல்வாதி தான் !அந்த வகையில் நானும் ஒரு அரசியல்வாதி தான் என்று பதிலளித்தார்!!!
எப்போது திருமணம்? என்ற வழக்கமான கேள்விக்கு? என் பெற்றோர் உட்பட அனைவரும் இந்த கேள்வியை கேட்டு ஓய்ந்து போய் விட்டார்கள், அதற்குரிய காலம் வரும் அன்று நானே அனைவருக்கும் தெரிவிப்பேன்! என்று வழக்கமான பதிலையே தற்போதும் தெரிவித்தார்.


நடிகர் ஆர்யா நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்குள் உஷாராகி திருமணம் செய்து கொண்டான் என்று ஆர்யாவை கலாய்க்கவும் செய்தார்.

மார்க் ஆண்டனி படத்தில் ஒன்பது சண்டை காட்சிகள்  இடம்பெற்று இருப்பதாகவும்! சண்டை பயிற்சியில் ஜாம்பவான்களான ஐந்து சண்டை பயிற்சியாளர்கள் அந்த காட்சிகளை செய்து இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

மார்க் ஆண்டனி படத்தை கண்ட பின்பு, படக்குழு சும்மா சொல்ல வில்லை, படம் சிறப்பாக வந்திருக்கிறது என்று ரசிகர்கள் கூறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் விஷால்..செப்டம்பர் 15 அன்று மார்க் ஆண்டனி ரசிகர்களிடம் எவ்வளவு மார்க் வாங்குவார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Popular