Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாதளபதி 69 படத்தில் முழுக்க முழுக்க அரசியல்.. விஜய்யின் கதாபாத்திரம் & கதை இது தான்.....

தளபதி 69 படத்தில் முழுக்க முழுக்க அரசியல்.. விஜய்யின் கதாபாத்திரம் & கதை இது தான்.. !

தளபதி விஜய் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் இருந்து விரைவில் விலகி முழுமையாக அரசியலுக்கு செள்ளவிருப்பதாக அறிவித்தார். நடப்பில் இருக்கும் கோட் படத்தையும், ஒப்பந்தம் செய்த 69வது படத்தையும் முடித்துவிட்டு 2026 தேர்தலை நோக்கி அரசியல் பயணம் செல்லவுள்ளார்.

- Advertisement -

விஜய்யின் 69வது படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாக வரும் தகவல்கள் அனைத்தும் உண்மையே. வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இப்படத்திற்கான முதற் கட்ட பணிகள் தீவிரமாக போய்க் கொண்டுள்ளது. சில மனஸ்தாபங்களும் இடையில் நடந்தது.

இப்படத்தை முதலில் ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த தனையா தான் தயாரிக்கவிருந்தார். ஆனால் விஜய் சம்பளத்தை அதிகரித்து 250 கோடிக்கு அருகில் கேட்பதால் அவர் பின்வாங்கினார். தற்போது கே.வி.என் நிறுவனம் விஜய்யின் 69வது படத்தை தயாரிக்க முன்வருவதாக செய்திகள் உள்ளன. விரைவில் தெரியவரும்.

- Advertisement -

ஹெச்.வினோத் தற்போது கேரளாவில் இப்படத்தின் ஸ்கிரிப்டை எழுதி வருகிறார். இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாகும் எனத் தெரியவந்துள்ளது. அரசியலில் புதுமுகமாக இருக்கும் விஜய் முழுமையாக அதில் குதிப்பதேக்குள் தன் கடைசி படமான தளபதி 69 மூலம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற வேண்டுமென திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

இந்தப் படத்தில் விஜய் முழுக்க முழுக்க மக்களுக்காக போராடு ஓர் தலைவனாக வரும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சர்க்கார் போன்று இல்லாமல், எதிர்காலத்தில் தா அரசியல் நாற்காலியில் அமர்ந்தால் இப்படி தான் மக்களுக்காக உழைப்பேன் என்பதைக் காட்டும் படமாக அமையும் போல. இப்படத்தின் ஷூட்டிங் கோட் முடிந்த உடனே துவங்கி இந்த ஆண்டுக்குள்ளே முடிக்க எண்ணுகிறார் விஜய்.

வெங்கட் பிரபுவுடன் இணைந்து உருவாக்கி வரும் கோட் திரைப்படம் இறுதிக் கட்டப் பணியில் உள்ளது. தற்போது படக்குழு அமெரிக்காவில் இளமைத் தோற்றத்தின் தொழில் நுட்பத்தில் பணிபுரிந்து வருகிறது. போஸ்ட் புரொடக்ஷன் அனைத்தும் முடிக்கப்பட்டு செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இது முடிந்த உடனே ஹெச்.வினோத் படம் தான்.

Most Popular