Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமா"மாஸ் ஹீரோவா இருந்தா இப்படி எல்லாம் ஆசை வரும்…..! - ஐஸ்வர்யராயின் முன்னாள் காதலருக்கு வந்த...

“மாஸ் ஹீரோவா இருந்தா இப்படி எல்லாம் ஆசை வரும்…..! – ஐஸ்வர்யராயின் முன்னாள் காதலருக்கு வந்த விபரீத ஆசை!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ராய் . 1994 ஆம் ஆண்டு  உலக அழகி பட்டம் பெற்ற இவர்  மணிரத்தினம் இயக்கத்தில்  மோகன்லால் மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான  இருவர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . அதனைத் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து  இந்தியா முழுவதும் புகழ்பெற்றார்

- Advertisement -

நீண்ட இடைவேளைக்குப் பிறகு  மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் பாகம் 2 ஆகிய திரைப்படங்களில்  இவர் நடித்திருக்கிறார் . முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில்  இரண்டாம் பாகம்  கடந்த 28ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது .

50 வயதை நெருங்கிக் கொண்டிருந்தாலும் ஐஸ்வர்யாராயின் அழகும் பொலிவும் இன்னும் குறையவே இல்லை . நந்தினி மற்றும் மந்தாகினி என  இரண்டு கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பால் ரசிகர்களை  மயங்கச் செய்தார் என்றே சொல்லலாம். பாலிவுட் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் ஐஸ்வர்யா ராய்க்கு  இரண்டு காதல் முறிவுகள் இருந்தது . அதில் ஒன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் ஏற்பட்ட காதல்  முறிவு.

- Advertisement -

பாலிவுட் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் சல்மான்கான் ஐஸ்வர்யாராயும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர் . இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  சல்மான் கானின் மூர்க்க குணத்தால்  அவர்களது உறவு முறிந்தது. அதற்கான முழு காரணமும் சல்மான் கான் தான் என ஐஸ்வர்யா ராய் கூறி இருந்தார் . அவரது காதலன் சல்மான் கான் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வருகிறார் . இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் சல்மான்  தனது காதலிகள் அனைவரும்  நல்லவர்கள் என்றும் எல்லா தோல்விக்கும் நான் மட்டுமே காரணம் எனக் கூறியிருக்கிறார் . மேலும் தனக்கு ஒரு குழந்தைக்கு தந்தையாக வேண்டும் என்று ஆசை இருப்பதாகவும்  இந்திய சட்டத்தின் படி  திருமணமாகாமல் அந்த ஆசை நிறைவேறாது எனவும்  வருத்தத்துடன் கூறி இருக்கிறார் அவர்

- Advertisement -

Most Popular